பகாசூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது


                                 


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன்  ‘சாணிக்காயிதம்’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன்  'பகாசூரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 


 


                                     


டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தில் இருந்து முதல் பாடலாக  ‘சிவ சிவாயம்’ பாடலும் அதனைத்தொடர்ந்து  'காத்தம்மா' பாடலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தில் ராதா ரவி, நட்டி நட்ராஜ், சரவணன் சுப்பையா, ராஜன்,  தராக்சி, மன்சூர் அலி கான், தேவதர்ஷினி, குணாநிதி, தேனப்பன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.