திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் சிங்கப்பூர், மலேசியா, துபாய், தோஹா, உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமானங்களில் வரும் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறையை  சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்வது என்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதிலும் வெளிநாடுகளில் இருந்து திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகளை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளுக்கு பின்பு தான் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.  தற்போது திருச்சி விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் வருவதால் , அதில் வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. அதோடு கடத்தல் தங்கம் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக மலேசியாவில் இருந்து வரும் பயணிகளில் பெரும்பாலானோர் நகைகளாக வாங்கிக்கொண்டு இந்தியாவிற்குள் நுழையும் போது அதற்கு உரிய வரியை செலுத்தாமல் கொண்டு வருவதால் அந்த நகைகளை அதிகாரிகள் தற்காலிகமாக பயணிகளிடமிருந்து வாங்கி பாதுகாத்து வருகின்றனர். 





மேலும் பயணிகளிடம் உரிய வரி செலுத்தி விட்டு நகைகளை வாங்கி செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் ஒரு சிலர் திட்டமிட்டு வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்காக அவர்கள் பல்வேறு யுக்திகளையும் கையாளுகிறார்கள். அதில் உடலில் மறைத்து கொண்டு வருதல், உடைமைகளில் மறைத்து கொண்டு வருதல், மோட்டார் இயந்திரங்கள், மின்சாதன பொருட்கள், ஆடைகளில் அலங்காரம் செய்து கொண்டு வருதல், என்ன படம் பசை வடிவில் கொண்டு வருதல் என்று பல இட்துகளை கையாளுகின்றனர். ஆனால் எத்தனை யுக்திகளை கையாண்டாலும் வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் அவர்களுடைய எல்லாம் முயற்சிகளையும் முறியடித்து கடத்தல் தங்கங்களை பறிமுதல் செய்து விடுகின்றனர். இப்படி அதிகாரிகள் சோதனைகளில் பறிமுதல் செய்யப்படும் தங்கத்தை திருச்சி சுங்கவரித்துறை தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பெட்டகங்களில் சேமித்து வைப்பது வழக்கம். கடந்த சில வருடங்கள் வரை ஒரு வருடத்திற்கு ஒருமுறை பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் வரும் பணம் நேரடியாக மத்திய நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் மத்திய அரசு புதிய வீதிகளையும், சட்டத்திருத்தங்களையும் அறிவித்து காலாண்டுக்கு ஒரு முறை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 




அதன்படி ஒரு ஆண்டில் 4 முறை (3 மாதத்திற்கு ஒரு முறை) பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அனைத்தும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுங்கத்துறையின் ஒரு பிரிவினர் அந்த தங்கத்தை சரியாக எடை போட்டு எடுத்துச் சென்று அவற்றை உருக்கி சுத்தம் செய்து ரிசர்வ் வங்கியிடம் வழங்கி வருகின்றனர்.  அதன் பின் ரிசர்வ் வங்கி அதனை எடை போட்டு அதற்கு உரிய தொகையை மத்திய அரசின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விடும். மத்திய அரசு திருச்சி சுங்கவரி துறையின் வங்கி கணக்கிருக்கு துறையின் வளர்ச்சிக்காக அந்த தொகையில் இருந்து 1 சதவீத பணத்தை கமிஷனாக வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் 75 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த 75 கிலோ தங்கத்தை சுங்கத்துறையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை முறையாக உருக்கப்பட்டு ரிசர்வ் வாங்கி  மூலம் அதற்கு உரிய பணம் மத்திய அரசின் வங்கி கணக்கு கொண்டு சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.