பாகுபலி, ஆர் ஆர் ஆர், பஜ்ரங்கி, மகதீரா போன்ற மெகா ஹிட் திரைப்படங்களின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். தற்போது கோவாவில் நடந்து வரும் 53 வது சர்வதேச திரைப்பட விழாவில் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கலந்து கொண்டுள்ளார். 


அங்கு பேசிய அவர், "நான் கதைகளை எழுதுவதில்லை; திருடுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். கதைகள் நம்மை சூழ்ந்துள்ளன. ராமாயணம் ஆகட்டும், மகாபாரதம் ஆகட்டும் அல்லது எந்த ஒரு உண்மை நிகழ்வுகளாகட்டும் கதைகள் எங்கெங்கும் இருக்கின்றன. அதை நீங்கள் உங்களது தனித்துவமான ஸ்டைலில் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும்.






உங்களின் கதையின் மேல் பார்வையாளர்களுக்கு பசியை தூண்ட வேண்டும் என்று உங்களின் நாட்டமே கற்பனை திறனை தூண்டுகிறது. நான் எப்போதும் என்னுடைய பார்வையாளர்களுக்கு என் கதையின் மேலும், கதாபாத்திரங்கள் மேலும் பசியை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதால், ஒவ்வொரு முறையும் தனித்துவமாகவும், ரசிக்க வைக்கும் படியும் என்னால் எழுத முடிகிறது என்று கூறினார்.


அவரது கதை ஆக்கம் குறித்து பேசுகையில், இடைவேளையின் போது ஒரு திருப்பத்தை எப்போதும் உருவாக்குவேன். அதற்கு மேல் அதை வீடாக எடுத்துக் கொண்டு இரண்டாம் பாதியில் வடிவமைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எதுவுமே இல்லை என்றாலும் அதிலிருந்து நீங்கள் எதையாவது உருவாக்க வேண்டும். ஒரு பொய்யை உண்மை போல் நீங்கள் கூற வேண்டும். ஒருவனால் நன்றாக பொய் சொல்ல முடிகிறது என்றால் அவனால் ஒரு சிறந்த கதை சொல்லி ஆக முடியும்.






இதைத்தொடர்ந்து, நீங்கள் உங்களது மிகப்பெரிய விமர்சகராக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்களின் சிறந்த திறனை வெளிப்படுத்தி, எண்ணற்ற உயரங்களை அடைய முடியும் ‌என்று கூறியுள்ளார்.


பாகுபலி, ஆர் ஆர் ஆர் திரைப்படங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், நான் கதை எழுதுவது மட்டுமில்லை; அதில் மாற்றம் செய்ய இயலாத அளவிற்கு அதில் என்னுடைய ஆளுமை இருக்கும். கதையின் ஓட்டம், கதாபாத்திரங்கள், திருப்பம் என  அனைத்தும் எனக்கு நினைவில் இருக்கும். இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர், பார்வையாளர் என அனைவரின் தேவைகளையும் ஒரு நல்ல கதையாசிரியர் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.