தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்தவர் நடிகர் பப்லு பிருதிவீராஜ். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் அவரை பிரிந்த பப்லு பிருதிவீராஜ் கடந்த ஆண்டு மலேசியாவை சேர்ந்த 24 வயதான ஷீத்தல் என்பவருடன் வாழ்ந்து வந்தார். 33 வயது வித்தியாசம் கொண்ட ஒரு பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பப்லு பிருதிவீராஜ் குறித்த ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.
அந்த வகையில் தற்போது இணையத்தில் பப்லு பிருதிவீராஜ் - ஷீத்தல் இருவரும் பிரிந்துவிட்டதாக ஏராளமான வதந்திகள் இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இருவரும் சேர்ந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலீட் செய்துவிட்டனர் என்பதால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற சலசலப்பு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார் பப்லு பிருதிவீராஜ்.
”நான் என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் நமக்கு ஏதாவது பாடத்தை கற்றுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது தான் எனக்கு எல்லாம் தெளிவாக புரிகிறது. இனிமேலும் நான் திருந்தவில்லை என்றால் முட்டாள் என்றுதான் அர்த்தம்.
நான் ஷீத்தலை பிரிந்துவிட்டேன் என நான் சொன்னேனா அல்லது ஷீத்தல் தான் சொன்னாளா? நீங்களாக எப்படி அதை சொல்ல முடியும். என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். இது குறித்து மற்றவர்கள் சொல்லும் விமர்சனங்கள், கருத்து குறித்து நான் கவலைப்படவில்லை. என்னை பிடித்த பத்து பேர் எனக்காக இருக்கிறார்கள் அதுவே போதும். நிறைய பேர் என்னை ஏமாற்றிவிட்டார்கள். கடவுள் தான் எனக்கு துரோகம் செய்துவிட்டார். வேறு யாராலும் எனக்கு துரோகம் செய்ய முடியாது. ஏன் என்றால் நான் யாரையும் நம்பவில்லை, யாரிடமும் போய் உதவி கேட்டு நிற்கவும் இல்லை.
நான் மிகவும் வெளிப்படையானவன். ஏன் மனதில் பட்டதை நான் அப்படியே பேசிவிடுவேன் என்பது அனைவருக்கும் தெரியும். முன்பை விடவும் எனக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து கூட எனக்கு போன் செய்து பாராட்டுகிறார்கள், ஏன் தோற்றத்தை பார்த்து வியக்கிறார்கள். அது எனக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது” என்றார்
சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் பப்லு பிருதிவீராஜ். அஸ்ரர் ஹக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பப்லு பிருதிவீராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.