நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் படம் பாபா. இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
சூப்பர் ஸ்டார் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாபா :
வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் அமோகமான வரவேற்பு இப்படத்திற்கும் இருந்தது. இருப்பினும் எதிரிபார்த்த அளவு வெற்றி பெருமாளை தோல்வியை சந்தித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு வெளியாகவுள்ளது எனும் தகவல் வெளியானது. முழுவீச்சில் நடைபெற்று வந்த பாபா ரீ ரிலீஸ் தற்போது திரையில் வர தயாராகிவிட்டது. வரும் டிசம்பர் 10ம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.
ரீ எடிட்டிங் செய்யப்பட்ட பாபா :
பெரிய திரையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் கிளாசிக் படமான பாபா திரைப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளது. படத்தின் ரீ எடிட் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. மேலும் இந்த ரீ ரிலீஸ் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்தில் இருந்து 2.5 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆடு மட்டுமின்றி புதிய பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72வது பிறந்தநாளை ஒட்டி இப்படம் டிசம்பர் 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுவது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அது மட்டுமின்றி லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரனுடன் இயக்கும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கேமியோ தோற்றத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.