தருமபுரி நகராட்சியில் நகர்மன்ற தலைவர் லட்சுமி தலைமையில் நகர்மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால் இந்தக் கூட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த பொழுது கூட்டத் தீர்மானங்கள் நகல் வழங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கான தீர்மானங்கள் எதுவும் இல்லை. நகராட்சியின் பொது நிதியில் பல்வேறு செலவினங்கள் செய்யப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக நகர்மன்ற உறுப்பினர்களே கூட்டத்தினை புறக்கணித்தனர். தருமபுரி நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் 19 உறுப்பினர்கள் திமுக சேர்ந்தவர்களும், ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி என திமுகவின் சார்பில் 20 உறுப்பினர்களும், அதிமுக 13 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருதலை பட்சமாக இருப்பதாக 20 உறுப்பினர்களில் 16 திமுக உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்நிலையில் அதிமுகவைச் சார்ந்த 13 உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில் கூட்டம் தொடங்கி, தீர்மானங்கள் குறித்து வாசிக்கப்பட்டது. அப்பொழுது பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. மேலும் வார்டு சபை கூட்டத்திற்கு வழங்கப்பட்ட ஜமகாலங்கள் ஒன்று ரூ.8000 என 66 ஜமகாலங்கள் ரூ. 5 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியதாகவும், பேனா பென்சில் 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும் செலவு கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததற்கு ரூ.9 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக உறுப்பினர்கள், கொடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் ஏற்று கள்ளக் கூடியதாக இல்லை. இந்த கூட்டத்தில் பெரும்பான்மையாக அதிமுக இருப்பதால், எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என தெரிவித்து, கையொப்பமிட்டு வெளியேறி சென்றனர். இதனால் நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதலுக்காக கொண்டுவரப்பட்ட 53 தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் நகராட்சி ஆணையாளர் சித்ரா அதிமுக உறுப்பினர்களிடம் நீண்ட நேரமாக தீர்மானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் அனைத்தையும் நிராகரிக்கிறோம் என்ற தெரிவித்து விட்டு வெளியே சென்றனர். இதனால் நகர் மன்ற உறுப்பினர்கள் வருகை பிரிவு குறித்து கேட்டதற்கு, நகராட்சி ஆணையாளர் கொடுக்காமல் சென்றுள்ளார். ஆனால் நகர் மன்ற தலைவர் திமுகவைச் சார்ந்தவராக இருந்தாலும் திமுக உறுப்பினர்களே நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.