விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சென்ற வாரம் பாக்கியலட்சுமி தனது கேட்டரிங் டீமுடன் ஒரு பக்கமும் கோபியும் ராதிகாவும் ஒரு பக்கமும் பாண்டிச்சேரியில் நடைபெறும் பழனிச்சாமியின் நண்பர் சுதாகர் வீட்டு திருமணத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ராதிகா செல்வியை பார்த்து ஷாக்காகிறார், கோபி  பழனிசாமியை பார்த்து ஷாக்காகிறார். இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம். 


 



பாக்கியா சமைக்கும் இடத்தில் பழனிசாமியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் சுதாகர் மனைவி அங்கு வந்து ஒரு டிஷ் லிஸ்டில் சேர்க்க மறந்துவிட்டேன். அதை சொல்லிட்டு போகலாம் என வந்தேன் என சொல்லி பக்லா என்ற ஸ்வீட் ஐட்டம் ஒன்றை சேர்த்து கொள்ள சொல்கிறார். பாக்கியாவும் "அதனால் என்ன மேடம் செய்து விடலாம்" என சொல்லி அனுப்பிவிடுகிறார். ஆனால் உண்மையில் அந்த டிஷ் எப்படி செய்வது என்பது எனக்கு தெரியாது என பழனிசாமியிடம் சொல்கிறாள். "அது என்ன பெரிய விஷயமா அதெல்லாம் நீங்க ஈஸியா செஞ்சுடுவீங்க" என சொல்லிவிட்டு இதோ  வந்து விடுகிறேன் என வெளியில் சென்று விட்டு யூ டியூப் வீடியோவில் அந்த ஸ்வீட்டை எப்படி செய்வது என பார்த்துவிட்டு உள்ளே வந்து "அது செய்வது ரொம்ப ஈஸி எனக்கு தெரியும்" என்கிறார் பழனிச்சாமி. ஆனால் வீடியோவை ஆஃப் செய்யாமல் வந்துவிடுகிறார். அதை பார்த்த பாக்கியலட்சுமி "இதை நீங்க இங்கேயே பார்த்து இருக்கலாம். எனக்கும் காட்டுங்க சார் நானும் என்ன பொருள் சேர்க்கணும் எப்படி செய்யனும் என பார்த்து கொள்கிறேன்" என சொல்லி வீடியோவை பார்க்கிறாள். 



பாக்கியா அந்த பக்லா ஸ்வீட்டை செய்து முடித்த பிறகு அதை செல்வியிடம் டேஸ்ட் பார்க்க சொல்கிறார். அவளும் ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா என சொல்ல அந்த ஸ்வீட்டை கப்பில் எடுத்து கொண்டு போய் பழனிசாமியிடம் கொடுத்து டேஸ்ட் பார்க்க சொல்கிறாள். அதை அவரும் சாப்பிட்டு விட்டு "ரொம்ப அபாரமா இருக்கு மேடம். உங்களுக்கு கற்பூர புத்தி டக்குனு புடிச்சுக்குறீங்க" என சொல்லி கொண்டு இருக்கும் போது அதை கோபி பார்த்து டென்ஷனாகி விடுகிறார். அந்த நேரம் பார்த்து கோபிக்கு ராதிகா போன் செய்து "எனக்கு போர் அடிக்குது அதனால் உடனே ரூமுக்கு வாங்க" என சொல்கிறாள். 


 



ரூமுக்கு சென்ற கோபி ராதிகாவிடம் "வாக்கிங் செய்ய போனேன்" என சொல்ல ராதிகா "சொல்லியிருந்தா ரெண்டும் பெரும் பேசிக்கிட்டே ஜாலியா போயிருக்கலாம்" என சொல்கிறாள். "இல்லை எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்குது" என சொல்ல கடுப்பான ராதிகா "உங்களுக்கு எங்க போனாலும் டென்ஷன் தான் அதை என்னிடம் தான் காட்டுவீங்க" என கோபப்படுகிறாள் ராதிகா. 


சுதாகரும் பழனிசாமியும் பேசி கொண்டு இருக்கும் போது அங்கே கோபி வருகிறார். "என்ன பிரச்சனை ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு" என பழனிச்சாமி கோபியை பார்த்து சொல்ல "எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். பாக்கியா எங்க போனாலும் பின்னாடி நீங்க போவீங்களா. என்னோட பொண்ணுக்கு எக்ஸாம் நடக்குது அதை விட்டுவிட்டு உன் பின்னாடி வரணுமா அவ" என கத்துகிறார். கோபி பழனிசாமியிடம் சத்தம் போடுவதை பார்த்த செல்வி அங்கே வந்து "என்ன சார் ஆச்சு?" என கேட்க பழனிச்சாமி செல்வியை "ஒன்னும் இல்ல நான் பார்த்துக்கொள்கிறேன் நீ போய் வேலையை பாருமா" என அனுப்பி வைக்கிறார்.



பழனிச்சாமி கோபியை ஓரமாக அழைத்து சென்று பேசுகிறார். "இது என்னோட நண்பன் பொண்ணோட கல்யாணம். பாக்கியா மேடம் இங்க சமைக்க வந்து இருக்காங்க. தேவையில்லாமல் எந்த பிரச்சனையும் செய்யாமல் இங்கிருந்து சென்று விடுங்கள்" என பழனிச்சாமி சொல்ல கடுப்பான கோபி "என்ன என்ன மிரட்டுரியா?" என கேட்க, "இல்லை உங்களை போல நானும் சத்தமா பேசினா நல்லா இருக்காது அதனால் நல்ல படியா சொல்றேன் இங்கிருந்து சென்று விடுங்கள்" என பொறுமையாக சொல்கிறார் பழனிச்சாமி.


சுதாகர் செல்வியிடம் இவர் யாருமா? என கேட்க செல்வி அவர் தான் பாக்கியா அக்காவோடு ஹஸ்பண்ட் என சொல்கிறாள். பிறகு சுதாகர் அங்கிருந்து கிளம்பியது பழனிச்சாமி செல்வியின் "அவர் பாக்கியா மேடம் வீட்டுக்காரர் என சொன்னியா?" என கேட்கிறார். "அவங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு இல்ல இனிமே அப்படி சொல்ல கூடாது" என சொல்கிறார். "முழுசா சொல்றதுக்குள்ள அவரு வந்துட்டாரு" என சொல்கிறாள் செல்வி. 



செல்வி இதை போய் பாக்கியவிடம் சொன்னதாம் பாக்கியா டென்ஷனாகி பழனிசாமியிடம் சென்று மன்னிப்பு கேட்கிறாள். "அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க இதை இப்படியே ப்ரீயா விட்டுருங்க" என சொல்லி சமாளிக்கிறார். பிறகு கோபியை தேடி பாக்கியா செல்ல செல்வியும் இதை சும்மா விட கூடாது என ஏத்தி விடுகிறாள். டென்ஷனில் இருந்த கோபி ராதிகாவின் சத்தம் போட்டு விட்டு வெளியே வருகிறார். ஏய் பாக்கியலட்சுமி என அதட்டலாக பாக்கியா முன்னாடி வந்து நிற்க கடுப்பில் இருந்த பாக்கியா ஏய் என ஆவேசமாக திரும்பி கத்த மிரண்டு போய் விடுகிறார் கோபி. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.