விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் கோபி எப்போது சிக்குவார்? சிக்குவார்? என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கோபி கடந்த வாரம் சிக்கினார். கோபி பாக்கியலட்சுமியிடம் சிக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ரசிகர்களுக்கு டுவிஸ்டாக கோபி ராதிகாவிடம் சிக்கினார்.
இந்த விவகாரத்தை தெரிந்த ராதிகா கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார். ராதிகாவிடம் சமாதானம் பேசச்சென்ற கோபி, எனக்கு பாக்கியாவை கல்யாணம் பண்ணதுல இருந்து பிடிக்காது. நான் அந்த வீட்டில் சந்தோஷமாக இல்லை. எனக்கு நீங்க ரெண்டு பேர்தான் உயிர். நீங்க இல்லாமல என்னால இருக்க முடியாது என்று கூறுகிறார். ஆனால், கோபியின் பேச்சுக்கு மயங்காத ராதிகா நீங்க எந்த கதையையும் சொல்ல வேண்டாம். எதையும் நான் நம்பத் தயாராக இல்லை. வெளியே போங்க என்று கூறுகிறார்.
அப்போது, என்னால் வெளியே போக முடியாது. உங்கள் இருவரையும் விட்டு வாழ முடியாது என்று கோபி சத்தம் போடுகிறார். அவரது சத்தத்தை கேட்டு எழுந்த மயூ அப்பாவைப் போல நீங்களும் சண்டை போடாதீங்க என்று சொல்கிறார். கோபி அமைதியாக வெளியே சென்று விடுகிறார். கோபியின் வீட்டில் அனைவரும் எழிலை பாராட்டி பேசிக் கொண்டிருக்கின்றனர். எழில் தனது அம்மா பாக்கியாவை வெளியில் அழைத்துச் செல்கிறார். அங்கே பாக்கியாவிற்கு ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வாங்கித் தருகிறார். அப்போது, எழிலிடம் கோபியுடன் எப்படி எல்லாம் வாழ ஆசைப்பட்டேன் என்று மனம் விட்டு கூறுகிறார். பின்னர், வீடு திரும்புகின்றனர்.
வீட்டில் அறையில் தனியாக இருந்த கோபி ராதிகாவுக்கு போன் செய்கிறார். ஆனால், ராதிகா எடுக்காத காரணத்தால் ராதிகாவிற்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். அதற்கும் பதில் வராத காரணத்தால் கோபி தூங்கிவிடுகிறார். அப்போது, கணவரின் போனை எடுத்து யாருக்கு போன் செய்கிறார் என்று பாக்கியா எதேச்சையாக பார்க்க முற்படுகிறார். அப்போது, தூக்கத்தில் எழுந்த கோபி பாக்கியாவிடம் என்ன வேவு பாக்கிறியா? என்று சண்டையிடுகிறார்.
நீண்ட நாட்களாக கோபி சிக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கோபி, ராதிகாவிடம் சிக்கியிருப்பது மன நிம்மதியை தந்துள்ளது. அதேசமயத்தில், ஏற்கனவே கோபியின் செயல்பாடுகள் மீது ஒட்டுமொத்த குடும்பமும் கோபி மீது சந்தேகத்துடனே உள்ளது. இந்த நிலையில், கோபி பாக்கியாவிடம் செல்போனை பிடுங்கி சண்டையிட்டிருப்பதால் விரைவில் கோபி பாக்கியாவிடமும் மாட்டிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோபி அவ்வாறு மாட்டினால் பாக்கியா நிச்சயம் மனமுடைந்து போவாள் என்று ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்