உத்திரபிரதேச மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் உட்பட கடத்தப்பட்ட மூன்று  இளம்பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.



கூட்டு முயற்சி :


உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள காகுவாவில் மூன்று  சிறுமிகள் காணவில்லை என காகுவா காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது. புகாரின்  பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளை  கண்டுபிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. கடத்தப்பட்டவர்கள் டெல்லியில் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் டெல்லி விரைந்த காகுவாலி காவல்துறையினர் டெல்லி மண்டவாலி கால்துறையின் உதவியை நாடியுள்ளனர்.




மொபைல் சிக்னல் :


இந்த வழக்கு விசாரணையில் இறுதியாக மொபைல் பயன்பாட்டில் இருந்த டவர் லொக்கேஷனை தவிர வழக்கில் வேறு எந்த துப்புமே கிடைக்கவில்லை என்கிறார் துணை  காவல் ஆய்வாளர் பிரியங்கா காஷ்யப். ஆனாலும் முயற்சியை தளரவிடாத  உத்திரபிரதேச மாநில காகுவாலி மற்றும் டெல்ல் மண்டவாலி காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர்.



சிசிடிவி :


சிக்னல் கிடைத்த இடமான டெல்லி வினோத்நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அந்த பகுதியில் குழு அமைத்தும் காவல்துறையினர் தேடுதலின் தீவிரத்தை அதிகப்படுத்தினர். உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சில தகவல் அறிந்தவர்களின் உதவியுடன் இறுதியில் மூன்று சிறுமிகளும் மேற்கு வினோத் நகரில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டனர்.






சிறுமிகள் மீட்பு:


வடக்கு வினோத் நகர் குடியிருப்பு பகுதியில் ஒன்றில் வீட்டில் இருந்த சிறுமிகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார் என்றும் , கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்த துப்புகள் கிடைத்திருப்பதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமிகள் எங்கு , எப்படி கடத்தப்பட்டார்கள் என காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.