உலக புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. அந்த படத்திற்க்கு  அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் பெயர் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில்தான் படத்தில் தலைப்பு அறிவிக்கப்பட்டது. Avatar: The Way of Water தலைப்பை  கடந்த ஏப்ரல் மாதம் CinemaCon 2022 நிகழ்ச்சியில் தோன்றி இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் அறிவித்தார். டிஸ்னிக்கு சொந்தமான 20th செஞ்சுரி ஸ்டுடியோ சார்பில்  தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் அறிவியல் புனை கதையாக  உருவாகியுள்ளது நாம் அறிந்ததே!







Avatar: The Way of Water இந்தியாவில் தமிழ், ஆங்கிலம் உட்பட ஆறு  பிராந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.கடந்த 2009 வெளியான அவதார் , தமிழ் , தெலுங்கு, இந்தி , ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் , அடுத்த பாகமான Avatar: The Way of Water இல் கன்னடம் மற்றும் மலையாள டப்பிங்கும் இணைக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர்  கடந்த மே 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியானது. Doctor Strange in the Multiverse of Madness திரைப்படத்தின் இடையே  அவதார் படத்தின் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது குறிப்பிடத்தக்கது. 






அவதார் திரைப்படத்தின்  அடுத்த பாகமான Avatar: The Way of Water  வருகிற டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அவதார் சீரிஸில்  மற்றுமொரு பியூட்டி என்னவென்றால் அவதாரில் 5 பாகங்கள் வரை இருக்கிறது. அவற்றின் வெளியீட்டு விவரங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி அவதார் 3ஐ டிசம்பர் 20, 2024 இல் வெளியிட திட்டமிட்டுள்ளது, அவதார்  நான்காவது பாகமானது  டிசம்பர் 18, 2026 அன்றும், அவதாரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகத்தை டிசம்பர் 22, 2028 அன்றும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.