நாள்: 09.05.2022
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
இரவு 7.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, உங்கள் புத்திசாலித் தனத்தை வளர்த்து அதன் மூலம் பிரகாசிக்கலாம். கலை மற்றும் இசை போன்றவற்றில் ஈடுபட்டு பயனடையலாம். உங்கள் வளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்தலாம். இன்று அதிக முயற்சி எடுத்து அதிக பலன் பெறும் நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, உங்கள் முயற்சிகள் பலன் தரும் நாள். சுய வளர்ச்சி உங்களுக்கு வழி காட்டும். பயணங்கள் ஏற்படலாம்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று சாதகமான நாள் அல்ல. மன உளைச்சலை சமாளிக்க அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் விருப்பங்களை அடைவதற்கு ஏதோ ஒன்று குறைவது போல உணர்வீர்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று விரைவான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நல்ல வாய்ப்புகளை இழக்காமல் தடுக்கலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க வேண்டும் எனில் உங்கள் அணுகுமுறையில் கவனம் தேவை. பாடல்கள் கேட்பது, திரைப்படம் பார்ப்பது உங்களுக்கு நல்லது.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்றைய நாள் அபாரமாக இருக்கும். உங்களின் சிறந்த தகவல் பரிமாற்றம் மூலம் நெருங்கியவர்களின் இதயத்தை தொடுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை ஆக்கபூர்வமான நாளாக ஆக்கலாம். உறுதி மற்றும் முறையான திட்டமிடல் மூலம் உங்கள் இலக்குகளை அடையலாம். இன்றைய நாள் பயனுள்ளதாக அமையும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று சவால்கள் மிகுந்த நாள். எனவே அமைதியாக எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக காணப்படாது. உங்கள் மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக உங்கள் ஆர்வம் குறையும். உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். முடிவெடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்று அமைதி நிலவும் நாள். உங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்கள் முயற்சிகள் பலன் தரும் நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, உங்கள் வீட்டில் விருந்தினர் வருகையால் இன்று உற்சாகம் காணப்படும். மகிழ்ச்சியாக இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. முக்கியமான முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று முக்கிய முயற்சிகள் கூட சிறந்த பலன்களை அளிக்காது. நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வது உங்களுக்கு நல்லது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்