கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் வெளியாகி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபீஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எஃபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.


டிசம்பர் 16-ல் அவதார்-2:


டைட்டானிக்கின் Highest Grossing Film (மிக அதிக வசூல் செய்த திரைப்படம்) எனும் ரெக்கார்டை ப்ரேக் செய்த அவதார் திரைப்படம், ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தது. 3டி வடிவில் உருவான இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வேற்று கிரகத்தில் வாழும் நாவி இன மக்களின் வளங்களை திருடும் மனிதர்கள், அதற்கு எதிராக போராடும் நாவி மக்கள், இவர்களுக்கு துணையாக நிற்கும் ‘ஹைப்ரிட்’ அவதாரான ஹீரோ, இவர்களைச் சுற்றி சுழலும் சயின்ஸ் பிக்ஷன் கதைதான் அவதார்.


ரசிகர்களின் 13 ஆண்டு திரை தாகத்தை தணிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள அவதார் படம், லண்டனில் நேற்று திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் படக்குழு, திரைப்பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். படத்தின் புதிய போட்டோக்களும் ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள், ட்விட்டர் முழுவதும் பாசிட்டிவான விமர்சனகளை பதிவிட்டு வருகின்றனர். 




ட்விட்டர் விமர்சனங்கள்:


அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்கள் ட்விட்டரில் அவர்களது விமர்சனங்களை எழுதிய வண்ணம் உள்ளனர். அதில் பெரும்பாலானோர், “அவதார் படத்தின் விஷூவல் எஃபெக்ட்ஸ் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. கதை சொன்ன விதம், படத்தை எடுத்த விதம் அனைத்திலும் ஜேம்ஸ் கேமரூன் ஜெயித்திருக்கிறார். மக்கள் அனைவரும் கண்டிப்பாக அவதார் படத்தை விரும்புவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். 






 






இன்னும் சிலரோ, அவதார் திரைப்படத்தில் எமோஷனல், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாகவும், கண்டிப்பாக இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், அவதார் இரண்டாம் பாகத்தின் மேல் இருந்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக கூடியுள்ளது.  


ஜெயித்தாரா ஜேம்ஸ் கேமரூன்?


அவதார் படம் வெளியாகி பல வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ”ரசிகர்களின் இத்தனை ஆண்டு காaத்திருப்புக்கு தகுந்த பதிலை தன் படத்தின் மூலம் ஜேம்ஸ் கேமரூன் கொடுப்பாரா?” என்ற சந்தேகம் பலருக்குள் இருந்து வந்ததது. அவர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் நீக்கும் அளவிற்கான ஒரு படைப்பை ஜேம்ஸ் கேமரூன் கொடுத்துள்ளதாக படத்தை பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.


 






படத்தின் சறுக்கல் என்ன?






அவதார் 2 திரைப்படம் 3 மணி நேரம் 10 நிமிட படம் என்பதால் முடிவில் மிகவும் சோர்வுர வைத்து விட்டதாகவும், முதல் பாதி கதையை விட இரண்டாம் பாதியின் கதை சற்று பலவீனமாக உள்ளதாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.