Share Market opened  : இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கியுள்ளது.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 34.28 புள்ளிகள் சரிந்து 62,592.08 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 14.55 புள்ளிகள் சரிந்து 18,628.20 புள்ளிகளாக உள்ளது. 









லாபம் -நஷ்டம்


பிபிசிஎல், லார்சன்,ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, சிப்ளா, டாடா கான்ஸ், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், ஐடிசி, எச்டிஎஃப்சி லைஃப், நெஸ்டிலே, பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


டாடா மோட்டார்ஸ், என்டிபிசி,எச்சிஉல் டெக், கோடக் மகேந்திரா, யுபிஎல், விப்ரோ, ஹின்டல்கோ, டிசிஎஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, ரிலையன்ஸ், எம்&எம், டெக் மகேந்திரா, அப்போலா மருத்துவமனை, டெட்டன கம்பெணி, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. 


வட்டி விகிதம் உயர்வு


இன்று ரிசிர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி வகிதம் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. 


இந்த வட்டி விகித உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று தொடங்கிய பங்குச்சந்தையானது மந்தமாகவே தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.


ரூபாய் மதிப்பு:





இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 25 காசுகள் குறைந்து 82.75 ரூபாயாக ஆக உள்ளது.