கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், இன்னும் சினிமே தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. முன்னணி ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்களும் கூட ஓடிடி ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இந்நிலையில், சுதந்தர தினம், ஓனம் என விடுமுறை நாட்கள் வர உள்ளதால், இந்த மாதம் ஓடிடி ரிலீஸுக்காக படங்கள் காத்திருக்கின்றன. அந்த வரிசையில், ஆகஸ்டு மாதம் வெளியாக இருக்கும் ப்டங்களில் லிஸ்ட் இதோ!


1. குருதி - அமேசான் ப்ரைம் ; ரிலீஸ் தேதி - ஆகஸ்டு 11


இந்த மாதம் 24-ம் தேதி ஓனம் பண்டிகை வரவுள்ளதால், சில மலையாள படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. மனு வாரியர் இயக்கத்தில் ப்ரித்வி ராஜ் நடித்திருக்கும் ‘குருதி’ திரைப்படம் ஆகஸ்டு 11-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. த்ரில்லர் படமான இந்த படத்திற்கு முன்பு, ப்ரித்திவிரஜ் நடிப்பில் வெளியான மற்றொரு த்ரில்லர் திரைப்படமான கேல்ட் கேஸ் ஓடிடியில் வெளியாகி இருந்தது. கொரோனா பரவல் காரணமாக ஓணம் பண்டிக்கைக்கு திரையரங்குகளில் படம் வெளியாகமல், ஓடிடியில் வெளியாக உள்ளது. 



Neeraj Chopra | தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிக்குமான ஒற்றுமை இதுவா? வாவ்..!


2. செர்ஷா - அமேசான் ப்ரைம் ; ரிலீஸ் தேதி - ஆகஸ்டு 12 


கார்கில் நாயகன் விக்ரம் பத்ராவின் சுயசரிதையாக உருவாகி இருக்கும் ஷெர்ஷா திரைப்படம், அமேசான் ப்ரைமில் ஆகஸ்டு 12-ம் தேதி வெளியாக உள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் இப்படத்தில் நடத்துள்ளனர். தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விஷ்னுவர்தன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹிந்தியில் இது அவருக்கு அறிமுகப்படம். 



3. நெற்றிக்கண் - டிஸ்னி + ஹாட்ஸ்டார் ; ரிலீஸ் தேதி - ஆகஸ்டு 13


நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வரும் ஆகஸ்டு 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்துக்கு பின்னர் நெற்றிக்கண் படம் மூலம் மீண்டும் நயன் தாரா ஓடிடி பக்கம் செல்கிறார். ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளிவரவிருக்கும் இப்படத்தினை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன்,  ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இத்திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.



Bharathi Baskar | "பயப்படவேண்டிய அளவுக்கு சிக்கலில்லை" - பாரதி பாஸ்கர் உடல்நலம் குறித்து குடும்ப உறுப்பினர் தகவல்


4. புஜ் - தி ப்ரைட் ஆஃப் இந்தியா - டிஸ்னி + ஹாட்ஸ்டார் ; ரிலீஸ் தேதி - ஆகஸ்டு 13


1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின்போது நடைபெற்ற சம்வத்தை மையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அபிஷேக் டுதையா இயக்கியுள்ளார். அஜய் தேவ்கன், சொனாக்‌ஷி சின்ஹா, சஞ்சய் தட் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. சுதந்தர தினத்தை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. 



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற: