Jawan Shooting in Chennai : சர்ப்ரைஸ் ஷூட்டிங்... ஷாருக் - தீபிகா சென்னை வருகை... மும்மரமாக நடைபெறும் "ஜவான்" படப்பிடிப்பு 


"ராஜா ராணி", "தெறி", "பிகில்", "மெர்சல்" என அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் திரைப்படங்களாக கொடுத்து வரும் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் களமிறங்கி மிகவும் மும்மரமாக படப்பிடிப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளார். 



சென்னைக்கு ஷாருக், தீபிகா வருகை:


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் - இயக்குனர் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் "ஜவான்". சிறிது இடைவேளைக்கு பிறகு தற்போது இப்படத்தின் பணிகள் துவங்கி விட்டன. "ஜவான்" திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும் பாலிவுட் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனும் இப்படத்தில் இணைகிறார். படப்பிடிப்பிற்காக சென்னை வந்து இறங்கியுள்ளார்கள் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். அவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


 






மும்மரமாக சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பு: 


இயக்குனர் அட்லீ தனது முந்தைய பிளாக் பஸ்டர் திரைப்படங்களை போலவே இப்படத்திலும் ஆச்சரியமான பல விஷயங்கள், கதாநாயகனின் மேக் ஓவர், பாலிவுட் மற்றும் கோலிவுட் இரண்டின் கலவையையும் ஒன்றாக சேர்த்து ஒரு மேஜிக் நிகழ்த்த உள்ளார் என்று ஆர்வமுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். நிச்சயம் இப்படமும் அட்லீ இயக்கத்தில் உருவான ஒரு மெகா பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமையும். தற்போது தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் நடிக்கும் ஷாட்ஸ்களின் ஷூட்டிங் மிகவும் மும்மரமாக சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 






வேற லெவலில் ட்ராவல் செய்யும் விஜய் சேதுபதி:
 
"ஜவான்" திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்திலம் நடிக்கிறார் என கூறப்படுகிறது. "விக்ரம்" திரைப்படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி தனது சிறப்பான நடிப்பால் பாராட்டுகளை குவித்ததோடு அவரின் மார்க்கெட்டும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.