கர்நாடக மாநிலம், பெங்களூரு கிளாசிக் பிளாக், ஜே.பி.நகரை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 37). ஐ.டி. நிறுவன ஊழியர். நேற்று இவர் தனது மனைவி அனுராதா (31), மகன் சாய்பிரணவ் (6) ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வாடகை காரில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். காரை ஷேக் ஜெய்லான் (30) என்பவர் ஓட்டி வந்தார். கார் நேற்று காலை சேலம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே அரியலூரிலிருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி சென்ற லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் கார் டிரைவர் ஷேக் ஜெய்லான் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். காரில் பயணம் செய்த பிரசன்னா, அனுராதா, சாய்பிரணவ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலை 5.30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய காரையும், லாரியையும் போலீசார் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்த முயன்றனர்.




இதனை தொடர்ந்து காரில் பயணம் செய்த பிரசன்னா, அனுராதா, சாய்பிரணவ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலை 5.30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய காரையும், லாரியையும் போலீசார் கிரேன் எந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது லாரியில் ஏற்றி வரப்பட்ட சிமெண்டின் எடை 40 டன் என்பதால் லாரியின் மொத்த எடை சுமார் 65 டன்னாக இருந்ததாக தெரிகிறது. இதனால் காரை அப்புறப்படுத்திய போலீசாருக்கு லாரியை அப்புறப்படுத்தும் பணி சவாலாக இருந்தது. இந்த விபத்தினால் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இருப்பினும் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் ஒருவழியாக லாரியை அப்புறப்படுத்தினர். அதன்பின் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். காலையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 




மேலும் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்பகுதியில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும், சாலையில் அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும். மேலும்  இனிமேல் இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.