தமிழ் சினிமாவில் 'காதல் கண்கட்டுதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. ஹோம்லியான நடிகையாக இருந்த அதுல்யா ரவி எளிதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது முதல் படத்தில் நடித்த உடன் அவர் சந்தித்த அவமானம் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதுல்யா ரவி அழகிலும் நடிப்பிலும் திறமையை வெளிப்படுத்தினாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் பெறவில்லை. அறிமுக நடிகர்களின் ஜோடியாக ஒரு சில படங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை ஒதுக்காமல் நடித்து வந்தார். அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, நாகேஷ் திரையரங்கம், கடாவர், வட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹோம்லியான நடிகையாக வலம் வந்த அதுல்யா ரவி தாராளமாக கிளாமர் காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார், ஜெய்யுடன் அவர் நடித்த 'கேப்மாரி' திரைப்படத்தில் அதுல்யாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார். அதே போல நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்திலும் கிளாமராக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கலக்கி வரும் அதுல்யா ரவி மீட்டர் படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஹரிஷ் கல்யாண் ஜோடியாக டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததும் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் கிளப்பில் உள்ளது. இருப்பினும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி அடிக்கடி போட்டோஸ் போஸ்ட் செய்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் சினிமாவில் அறிமுகமான போது அவரின் உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் அதுல்யா ரவி எப்படி அவமானப்பட்டார் என்பது குறித்து பேசி இருந்தார். நான் படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் படத்தில் நடித்துள்ளது பற்றி கூறியிருந்தேன். படக்குழு தெரிவித்தது போல ரிலீஸ் தேதியை சொல்லி நான் இன்று வெளியாக போகிறது நாளை வெளியாக போகிறது என சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் சொன்ன நேரத்தில் படம் வெளியாகவில்லை.
ஒரு முறை இரு முறை அல்ல பல முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் என்னுடைய உறவினர்களும் நண்பர்களும் என்னை கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். உண்மையிலேயே நீ படத்தில் நடிச்சியா இல்லை சும்மா கதைவிடுறியா? என என்னை கலாய்க்க தொடங்கி விட்டர்கள். அப்போதெல்லாம் எனக்கு அவமானமாக இருந்தது. படம் வெளியான பிறகு தான் அனைவரும் என்னை நம்பினார்கள். பின்னர் என்னை பாராட்டினார்கள். அதற்கு பிறகு தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.