வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பையில் பெரும்பாலான அணிகள் தலா ஒரு போட்டியையாவது விளையாடியுள்ளன. இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தி இடையேயான நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக குரூப் பி-யில் உள்ள இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் சமன்பாடு கடினமாகியுள்ளது. 


டி20 உலகக் கோப்பை 2024ல் குரூப் பி பிரிவில், ஓமனை வீழ்த்திய நமீபியா அணி தற்போது 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம் போட்டி ரத்து செய்யப்பட்டதால், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து தலா ஒரு புள்ளிகளை பெற்றன. இங்கிலாந்தின் அடுத்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றால், டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் அணிக்கு சூப்பர் 8-க்கு செல்வதற்கான வாய்ப்பு சிக்கலாகிவிடும். 






இங்கிலாந்து வெளியேறுமா..? 


2022 டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெற்ற அணி தற்போது ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. வருகின்ற ஜூன் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி அடுத்த போட்டியில் விளையாட உள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தால், 2 போட்டிகளில் ஒரே ஒரு புள்ளிகளை மட்டுமே பெறும். அதன்பிறகு, மீதமுள்ள 2 போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அதன் மொத்த போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அதன் மொத்த புள்ளிகள் 5 ஆக மட்டுமே இருக்கும். நமீபியா அணி, கடந்த போட்டியிலேயெ தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. அதேபோல், இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி சூப்பராக விளையாடியது. எனவே, குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவதற்குள் நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் அடுத்துவரும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி சூப்பர் 8 செல்லும் வாய்ப்பு கடினமாகிவிடும். இந்த குழுவில் தற்போது சூப்பர்-8க்கு செல்லும் மிகப்பெரிய போட்டியாளராக ஆஸ்திரேலியா உள்ளது. ஏற்கனவே இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள இங்கிலாந்து, சூப்பர்-8க்கு செல்லும் அதன் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமானால், எப்படியும் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும்.


2022ல் அசத்திய இங்கிலாந்து: 






2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆனால், கடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றிபெறுவது அவசியமாக இருந்தது. ஏனெனில், இதற்கு முந்தைய போட்டியில், அயர்லாந்து இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் மூன்று 3 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது. இதையடுத்து, ஜோஸ் பட்லர் தலைமையின் கீழ், குழுநிலையின் அடுத்த இரண்டு போட்டியில் வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது.