உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகமானது மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படம் மூலம். அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் மீண்டும் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பல ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். 


 



 


ஐஸ்வர்யா பெயரில் போலி பாஸ்போர்ட் :


மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் பெயரில்  வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் போலி பாஸ்போர்ட் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உத்தரப் பிரதேச மாநில போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இணையம் சார்ந்த மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காகவே சர்வதேச அளவில் நெட்வொர்க்களை உருவாக்கி பல வகைகளிலும் மோசடி செய்து வருகின்றனர். 


 






 


மூலிகை மருந்து பெயரில் மோசடி :


நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி செய்தது மற்றும் மட்டுமின்றி நொய்டாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் கேன்சர் நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து என கூறி ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு இந்திய ரூபாயின் மடிப்பில் 11 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரித்ததில் ஒருவர் கானா நாட்டை சேர்ந்தவர் மற்றும் இருவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து சிம் கார்டு, லேப்டாப் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


 






விசாரணையின் போது மேலும் சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி கும்பல் இவை தவிர போலியான மேட்ரிமோனி வெப்சைட், டேட்டிங் வெப்சைட் என மேலும் பல போலியான வெப்சைட்கள் மூலம் மோசடி செய்து வருவது தெரிய வந்துள்ளது.