நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அண்மையில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாம் திருமணம் செய்துகொண்டது குறித்து அவரது முதல் மணைவி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.இதனைத் தொடர்ந்து தற்போது ஆஷிஷின் முதல் மனைவியான ராஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பூடகமான வகையில் கருத்து தெரிவ்த்து வருகிறார். இந்தக் கருத்துக்களால் இந்தத் திருமணம் ராஜோஷிக்குத் தெரிந்து நடந்ததா தெரியாமல் நடந்தா என்கிற குழப்பம் உருவாகியுள்ளது.
”வாழ்க்கை என்கிற புதிர்விளையாட்டில் மாட்டிக்கொள்ள வேண்டாம்“ என தனது ட்விட்டர் பக்கத்தின் கருத்துத் தெரிவித்துள்ளார் ராஜோஷி.மேலும் மேலும் “குழப்பங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும் கடினமான காலங்களை கடந்துதான் தற்போது நிம்மதியாக இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்தக் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பலவகை குழப்பங்களை உருவாக்கியுள்ளது.
ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாவது திருமணம் அவரது முதன் மனைவிக்கு தெரிந்துதான் நடந்ததா என்கிற கேள்வி அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.
ஆஷிஷ் வித்யார்த்தி :
’தில்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தொடர்ந்து தமிழில் பகவதி, ஏழுமலை, பாபா என அடுத்தடுத்து நடித்து கவனம் ஈர்த்த ஆஷிஷ் வித்யார்த்தி, நடிகர் விஜய்க்கு அப்பாவாக கில்லி, சூர்யாவுடன் ஆறு, ஜீவாவுடன் ஈ என பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து வெற்றிகரமான நடிகராக வலம் வந்தார்.
ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழித் திரைபடங்களில் நடித்து வந்துள்ளார்.
இரண்டாவது திருமணம்:
மேலும், நடிப்பு தாண்டி, ப்ளாகர், விளாகர், பாட் கேஸ்ட் என பன்முகத் திறமையாளராக வலம் வரும் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீப காலமாக தன் யூட்யூப் சானலில் படு ஆக்டிவ்வாக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது 60 வயதை எட்டியுள்ள ஆஷிஷ் வித்யார்த்தி, அஸ்ஸாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இணையத்தில் இவர்களது திருமணப் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், கேரள பாரம்பரிய உடையில் ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி அஸ்ஸாமிய உடையிலும் இந்தப் புகைப்படத்தில் தோற்றமளிக்கின்றனர். மேலும், “என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்துள்ளது ஒரு அசாதாரண உணர்வு. காலையில் சிறப்புத் திருமணம் (court marriage) செய்துகொண்டு, மாலையில் நண்பர்களுக்காக கெட் டு கெதர் நடத்தினோம்” என ஆஷிஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி - ரூபாலி தம்பதிக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.