தி வில்லேஜ்


ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய ஹாரர் சீரிஸ் ‘தி வில்லேஜ்’. மில்லிந்த் ராவ் இயக்கியிருக்கும் இந்தத் தொடருக்கு ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இயக்குநர் தீரஜ் வைதி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியுள்ளார்கள். ஸ்டுடியோ சக்தி ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.  ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன் ஜார்ஜ் மாயன், பி. என் சன்னி, முத்துக்குமார் கே, கலைராணி எஸ்.எஸ், ஜான் கொக்கென், பூஜா, வி ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் இந்த தொடரின் நடித்துள்ளார்கள்.


ட்ரெய்லர் 


சமீப காலங்களில் ஆர்யா வழக்கமான கமர்ஷியல் கதைகளைத் தவிர்த்து சற்று ஃபேண்டஸியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் கடந்த ஆண்டு கேப்டன் படத்தில் நடித்திருந்தார் ஆர்யா. ஏலியன் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறியது.


வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் தி வில்லேஜ் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. தன்னுடைய மனைவி மற்றும் மகளுடம் விடுமுறைக்காக ரோட் ட்ரிப் செல்கிறார்கள். செல்லும் வழியில் கட்டியல் என்கிற கிராமத்தில் இவர்களின் கிராமத்தில் கார் நின்றுவிடுகிறது. தன்னுடைய மனைவி மற்றும் மகளை  காணாமல் போக அவர்களை தேடுவதற்காக மூன்று நபர்களின் உதவியைக் கேட்கிறார்.  அதே நேரத்தில் மிகப்பெரிய மருந்து நிறுவனம் ஒன்றில் உரிமையாளர் இந்த கிராமத்தில் இருக்கும் ஏதோ ஒரு சாட்சியை அழிக்க ஒரு பெரிய படையை அனுப்புகிறார். இந்த கிராமத்திற்கு வரும்  அனைவரும் கொடுரமான ஜாம்பி மாதிரியான உயிரினங்களால் கொல்லப் படுகிறார்கள்.  இந்த பிரச்சனைகளில் இருந்து தன்னுடைய குடும்பத்தை ஆர்யா எப்படி காபாற்றுகிறார் என்பதே தி வில்லேஜின் கதை.


இந்தப் ட்ரெய்லரை தமிழில் நடிகர் கார்த்தி வெளியிட, தெலுங்குவில் ரானா டகுபதி மற்றும் இந்தியில் அபிஷேக் பச்சன் வெளியிட்டார்கள்.






ட்ரெய்லரில் வரும் காட்சிகளை வைத்து ஒரு கிராமத்தில் இருக்கும் கெமிக்கல் ஃபாக்டரியில் ஏற்பட்ட பாதிப்பினால் இங்கு இருக்கும் மக்களில் சிலர் ஜாம்பிகளாக மாறிவிடுகிறார்கள். இந்த உண்மைகளை அழிப்பதற்கான முயற்சிகளில் ஃபாக்டரி முதலாலிகள் முயற்சிக்கிறார்கள். தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் இந்த உண்மைகளை கதாநாயகனான ஆர்யா வெளிச்சத்திற்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம் . ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த மிருதன், பிரபு தேவா நடித்த மெர்குரி உள்ளிட்டப் படங்களும் இதே மாதிரியான கதைகளைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.