சர்பட்டா பரம்பரை படம் வெளியான பிறகு அந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசப்பட்டது. பேசப்படுகிறது. அதில் முக்கியமாக ஆர்யாவும், பசுபதியும், அவர்களை சுமந்து செல்லும் சைக்கிளும் படாது பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. ‛வாத்தியாரே...’ என துவங்கி, வரும் வழியில் பசுபதியிடம் தன் நினைவுகளையும், பசுபதியின் பற்றையும் வெளிப்படுத்தும் காட்சி தான் அது. பாக்ஸிங் பயிற்சி மையத்திலிருந்து பக்கத்து தெருவுக்கு லிப்ட் கேட்டது ஒரு குத்தமா... ஒரு தெருவுக்கு போன பயணம்... இப்போ நாடு கடந்தெல்லாம் பயணித்துக் கொண்டிருக்கிறது. லாட்ஸ் மைதானத்தில் கூட அந்த சைக்கிள் பயணித்துவிட்டது. ஊரே ஏன்... உலகமே மீம்ஸ் போட்ட அந்த போட்டோவுக்கு, அதில் நடித்த ஆர்யாவே மீம்ஸ் போட்டா என்ன செய்வது? ‛ஆத்தா எனக்கு வேற வழிதெரியல ஆத்தா...’ என விஜயகாந்த் டயலாக் வருமே.. அது போல, எனக்கு வேற வழி தெரியல ,நம்ம டயலாக்கை ஊரே பேசுது... நான் பேசக்கூடாதா என்பதைப் போல், அதே வாத்தியார் டயலாக்கை வைத்து பசுபதியை ட்விட்டரில் வரவேற்று பதிவிட்டுள்ளார் ஆர்யா.
ஆர்யாவின் இந்த பதிவிற்கு ட்விட்டரின் புது வரவான பசுபதியும் தனது பதிலை தெரிவித்துள்ளார்.
சரி... இது இரண்டும், கபிலன் மற்றும் வாத்தியாருக்கு இடையேயான பதிவு, அதையாவது விட்டு வைத்தார்களா என்று கேட்டால்... அதையும் விடவில்லை நெட்டிசன்கள்... ஆர்யாவின் பதிவிலேயே ட்விட்டர் குருவியில் ஆர்யாவும், பசுபதியும் பறப்பது போன்ற மீம்ஸ்களை ஆர்யாவின் பதிவில் பதிலாக பதிவிட்டு வருகிறார்கள்.
இதுக்கு எண்டே இல்லையா சார்....