ஆர்யா, சாயிஷா கோலிவுட்டின் க்யூட் தம்பதி என்று பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு 2019 மார்ச்சில் திருமணம் நடந்தது. 2021 ஜூலையில் இத்தம்பதி பெற்றோராயினர். தங்களின் 3 ஆம் ஆண்டு திருமண நாளை ஒட்டி, பரஸ்பரம் ரொமான்டிக்கான வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர் ஆர்யா, சாயிஷா.


ஆர்யா, சாயிஷா கோலிவுட்டின் க்யூட் தம்பதி என்று பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு 2019 மார்ச்சில் திருமணம் நடந்தது. 2021 ஜூலையில் இத்தம்பதி பெற்றோராயினர்.


இந்நிலையில் பெற்றோர் ஆனபின்னர் வந்துள்ள முதல் திருமண நாளை இருவரும் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். திரைகளில் காதலால் கசிந்துருகும் ஆர்யா, நிஜத்தில் உருகாமல் விட்டுவிடுவாரா என்ன? 




அதனால் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இவ்வாறாகப் பதிவிட்டுள்ளார்.. இந்த உலகிலேயே மிகச் சிறந்த வாழ்க்கைத் துணைக்கு இனிய 3ஆம் ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள். என்னை கவனித்து, ஊக்குவித்து, உறுதுணையாக இருந்து, என் மீது அன்பைப் பொழிவதற்கு நன்றி. (இருந்தாலும் இப்போது எனக்கு இரண்டாம் இடம்தான்) லவ் யூ. 
இவ்வாறு ஆர்யா பதிவிட்டுள்ளார். குழந்தை பிறந்த பின்னர் தன் மீதான அன்பு கொஞ்சம் மடை மாறி குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் வந்துவிட்டது என்பதே இரண்டாவது இடம் என செல்லமாகக் குறிப்பிட்டுள்ளார் ஆர்யா.






சாயிஷாவும் பதிலுக்கு அன்பைக் கொட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் நேசிக்கும், போற்றும், மதிக்கும் என்றென்றும் வணங்கு ஆணுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். எனக்கே எனக்கானவனாக இருப்பதற்கு நன்றி. இந்த பூலோகத்திலேயே சிறந்த கணவர், சிறந்த தந்தை நீதான். உன்னை நித்தியமாகப் பற்றிக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.






ஆர்யா தனது போஸ்டில் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்க, சாயிஷா திருமணப் புகைப்படத்துடன் தற்போது மேற்கொண்டுள்ள செகண்ட் ஹனிமூன் ஃபோட்டோவையும் வெளியிட்டுள்ளார்.