நாட்டில் உள்ள உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியது. அவற்றில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றியை நாட்டில் உள்ள பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






இந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் டுவிட்டை ஆம் ஆத்மி கட்சி டேக் செய்து டுவிட் செய்திருப்பது பெரும் வைரலாகி வருகிறது. வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி ( அன்றைய தினம்தான் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது) தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்வீப் என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.






தற்போது, பஞ்சாபில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி அந்த டுவிட்டை டேக் செய்து “ஆம்” என்று பதிவிட்டுள்ளது. ஸ்வீப் என்றால் துடைத்தல் என்று அர்த்தம். ஆம் ஆத்மி கட்சியின் சின்னமாக துடைப்பம் உள்ளது. இதனால், சுத்தமாக துடைத்துவிட்டோம் என்ற அர்த்தத்தில் ஆம் ஆத்மி ஸ்வீப் என்று டுவிட்டை டேக் செய்து பதிலளித்துள்ளனர்.


பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, அந்த மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியை அமைக்கிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண