தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவருடைய துணிவு திரைப்படம், வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுவென நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அஜித்தின் அடுத்தப்படமான ‘அஜித் 62’  ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்; சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 


1994 ஆம் ஆண்டு வெளியான ‘பாசமலர்கள்’ படத்தில் அஜித்தும், அரவிந்த்சாமியும் இணைந்து நடித்தனர்;  இந்தப்படத்தை சுரேஷ் சந்திர மேனன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் இவர்கள் அஜித்தின் 62 ஆவது படத்தில் இணைய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.  






தனி ஒருவன் படம் வெளியான பின்னர், அஜித்தையும் அரவிந்த் சுவாமியையும் திரையில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டனர்; அந்த ஆசை இந்தப்படத்தில் நிறைவேறுமா? என்று ரசிகர்களோடு ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


அஜித் - சந்தானம் காம்போ 


இத்துடன் கூடுதல் தகவல் என்னவென்றால், வீரம் படத்தில் காமெடியானாக நடித்த சந்தானமும் ஏகே 62 வில் இணையவுள்ளராம். ஆனால், இந்த படத்தில் அவர் நகைச்சுவை கலைஞராக நடிக்கவுள்ளாரா அல்லது துணை கதாபாத்திரமாக நடிக்கவுள்ளாரா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாக வில்லை; 


அஜித்தின் சம்பளம் குறித்த தகவல் 


முன்னதாக, இந்தப்படத்தில் நடிப்பதற்கு அஜித் 100 கோடி ரூபாய் கேட்டதாகவும், அதற்கு லைகா நிறுவனம் மேலும் 5 கோடி ரூபாய் சேர்த்து கொடுத்ததாகவும் தகவல் வெளியானது;  இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில், 2023 கோடையில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த விவரங்கள் அடுத்தடுத்த மாதங்களில் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது; 


மேலும் படிக்க : Varisu Sunil Babu Passes Away: அச்சச்சோ.. ரிலீசுக்கு முன்பே மறைந்த ‘வாரிசு’ பட பிரபலம்.. சோகத்தில் ரசிகர்கள்!