சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அருவி’என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை சோனியா. இவர் முன்னதாக, ‘அழகி’ சீரியலில்` திவ்யா நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இதற்கிடையே நடிகை சோனியாவுக்கு திருமணம் ஆனதால் சில காலம் சின்னத்திரையில் இருந்து ப்ரேக் எடுத்தார். தனது சின்னத்திரை ரீ-என்ட்ரி குறித்து சமீபத்தில் பேசியுள்ள சோனியா, “ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டுமென்று யோசிச்ச சமயம் அருவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் முதல் சீரியலும் சன் டிவியில்தான் ஒளிபரப்பானது.
கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து எனது ரீ-என்ட்ரியும் சன் டிவியில் அமைந்தது கூடுதல் சிறப்பு. இந்தத் தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
திருமணம் ஆன பிறகு‘சார்விக்’ஸ் இட்லி / தோசை மாவு’ என்கிற ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறேன். பிசினஸ், சீரியல் இரண்டையும் மேனேஜ் செய்கிறேன்.
Tamil news | மீண்டும் மீனவர்கள் போராட்டம்...! அலங்கை ஜல்லிக்கட்டு...! தைப்பூசம்...! - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். அவங்க என் கணவருடைய ஃபேமிலி ஃப்ரெண்ட். நான் கல்யாணம் ஆகிப்போன பிறகு ஷோபா அம்மாவும், நானும் க்ளோஸ் ஆகிட்டோம். அவங்க என்னைவிட வயதில் மூத்தவங்களாக இருந்தாலும் நாங்க இரண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.
எங்கள் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொள்வோம். ஆனால்,இதுவரை விஜய் சாரை பற்றி எதுவும் ஷோபா அம்மாகிட்ட நான் கேட்டதும் இல்லை, பேசினதும் இல்லை. ஃப்ரெண்டா எங்களை பற்றி கதை பேசவே எங்களுக்கு டைம் இல்லை” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா மனதை மாற்றிய இமயமலைப் பயணம்! தனுஷை பிரிய இதுதான் காரணமா?