லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் காம்பினேஷனில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'விக்ரம்'.


விக்ரம் 300 கோடி வசூல்


கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ்நாடு தாண்டி பல இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது


சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் இருந்து சினிமாவுக்குத் திரும்பியுள்ள கமல்ஹாசனின் இந்தப்படம், கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான மாஸ் ஹீரோக்களின் படங்கள் எதுவும் செய்யாத சாதனையை நிகழ்த்தி வருகிறது.


விக்ரம் படம் வெளியாகி 11 நாள்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படம் உலகம் முழுவதும் 310 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.


தள்ளிவைக்கப்பட்ட ஹரி - அருண் விஜய் படம் 




இந்நிலையில் வரும் ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட யானை படத்தின் வெளியோடு ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


’சாமி 2’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஹரி இயக்கி அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள யானை படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், படத்தின் வெளியீடு தற்போது விக்ரம் நடத்தும் வசூல் வேட்டை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பு நிறுவனம் ட்வீட்


 






முன்னதாக விக்ரம் வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து யானை படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்த நிலையில், லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள், யானை படத்தின் வெளியீட்டை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண