Arun Vijay: ‛அருண் விஜய்யின் சொத்து என்னனு தெரியுமா...?’ அவரே வெளியிட்டார்!

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் செப்டெம்பர் 16 அன்று வெளியான திரைப்படம் "சினம்". ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அருண் விஜய். திறமையான நடிகராக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையாததால் அவரின் நடிப்பு திறன் முழுமையாக வெளிப்படவில்லை. இருப்பினும் தளராத மன தைரியத்துடன் "என்னை அறிந்தால்" திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து இன்று வெற்றி நடை போடுகிறார் நடிகர் அருண் விஜய். 

 

 

குடும்பம் தான் எனது பக்க பலம்:

 

நடிகர் விஜயகுமார் மகனாக இருப்பினும் தனது விடா முயற்சி மூலம் முன்னுக்கு வந்தவர் அருண் விஜய். இன்று இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வரும் அருண் விஜய்க்கு பக்கபலமாக இருப்பது அவரின் குடும்பமே. அதை பல முறை குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய். சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருந்து வரும் அருண் அவ்வப்போது புகைப்படங்களை போஸ்ட் செய்வது வழக்கம். அதில் பெரும்பாலும் அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களாகவே இருக்கும். அந்த வகையில் தற்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை போஸ்ட் செய்துள்ளார் அருண். குடும்பத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான டீ- ஷர்ட் அணிந்து இருக்கிறார்கள். அதில் டீம் அருண் என பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அருணை கட்டியணைத்தவாறு இருக்கும் இந்த புகைப்படத்தை போஸ்ட் செய்து அதற்கு "உங்கள் குடும்பம் மற்றும் உங்களின் நண்பர்கள் தான் உங்களின் சொத்து" என ஒரு குறிப்பை பதிவிட்டுள்ளார். 

 

 

வெற்றி நடை போடும் சினம்:

அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய்யுடன் இணைந்து "ஓ மை டாக்" என்ற படத்தில் நடித்திருந்தார். செல்ல பிராணியை மையாக வைத்து எடுக்கப்பட்ட அப்படம் சிறியவர்கள்  முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சில தினங்களுக்கு ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் "சினம்". இப்படம் செப்டெம்பர் 16ம் திரையரங்குகளில் வெளியனானது. ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கு முன்னர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் மற்றும் யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Continues below advertisement