நடிகர் அருண் விஜயின் நடிப்பில் இறுதியாக வந்த யானை, சினம் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அக்னி சிறகுகள் நடித்து முடித்துள்ள அருண் விஜய், அடுத்ததாக ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் நடித்து வருகிறார். மதராசபட்டினம், தலைவா, தலைவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை எமி ஜாக்சன் நடிக்கிறார்.  


இவருடன் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படத்தின் போஸ்டர் வீடியோ கடந்த விஜயதசமியன்று வெளியானது. ஆக்‌ஷன் களத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்தப்படத்தில், அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக  தெரிகிறது.


முன்னதாக, இந்தப்படம் சம்பந்தமான சண்டைக் காட்சிகளுக்காக அருண்விஜய் பயிற்சியில் ஈடுபட்ட போது, அவருக்கு முழங்காலில் அடிபட்டது. அதனைத்தொடர்ந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டே உடற்பயிற்சி செய்யும் வீடியோவை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.


 


 






இந்த நிலையில், அருண் விஜய்க்கு படப்பிடிப்பில் மீண்டும் அடிபட்டுள்ளது.


 


 






இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “திரையில் நீங்கள் பார்க்கும் என்னுடைய சண்டைக் காட்சிகளுக்கு பின்னர், இது போன்ற காயங்கள் இருக்கிறது. இருப்பினும், என்னுடைய சண்டைக்காட்சிகளை நானே செய்வதிலேயே எனக்கு விருப்பம். அடுத்தப்படம் வெளிவருவதற்காக காத்து இருக்கிறேன். லவ் யூ ஆல்” என்று பதிவிட்டு இருக்கிறார்.