தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறியப்பட்டாலும் தொடந்து தனக்கான அடையாளத்தை பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய். 1995 ஆம் ஆண்டு முதலே அருண் விஜய் நடித்துக்கொண்டிருந்தாலும், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை மக்கள் மத்தியில் வாங்கிக்கொடுத்தது. அந்த படத்தில் அவர் ‘விக்டர்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித்திற்கு வில்லனாக நடித்த அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். மேலும் படம் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வந்த அவரை ரசிகர்கள் சூழந்துக்கொண்டு பாராட்டிய தருணத்தில் அவர் நெகிழ்ந்து அழுத புகைப்படங்களும் வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களை கலக்கின.
தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் 33 (AV 33) என்ற படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து கதை பின்ணணியில் உருவாகி வரும் இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் ஹரி முதன் முதலாக இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அருண் விஜய்க்கு படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒரு மணி நேரம் படப்பிடிப்பு தளத்தில் கார்டியோ உடற்பயிற்சி செய்து ஓய்வெடுத்துக்கொண்டதாகவும். இந்த காயம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு எவ்வித பளு தூக்கும் உடற்பயிற்சியும் தன்னால் செய்ய முடியாது என வருத்தமாக தெரிவித்துள்ளார் அருண் விஜய் .