வணங்கான் படத்தில் தன்னை நடிக்க வைத்த இயக்குனர் பாலாவுக்கு நடிகர் அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
வணங்கான் திரைப்படம்:
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வணங்கான், இப்படத்தில் கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார், மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது.
இதையும் படிங்க: நடிகர் சைஃப் அலிகானை பின்தொடர்ந்த ஃபோட்டோகிராஃபர்..கொந்தளித்த நடிகர்
இப்படம் வெளியாகி விமர்சகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் தனக்கு இந்த கதாப்பாத்திரம் கொடுத்த பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாலா சார்-க்கு நன்றி:
இது குறித்து அருண் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்” கோட்டியாக வணங்கானில் என்னை வாழ வைத்த இயக்குனர் பாலாவுக்கு எனது மனமார்ந்த் நன்றிகள், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம், வணங்கானில் பேசாமலேயே மக்களின் இதயங்களை வென்று காட்டியதற்கு நீங்கள் தான் காரணம். என்னால் என்ன முடியும் என்பதை நீங்கள் தான் எனக்கு உணர்த்தினீர்கள். இதற்காக நான் உங்களுக்கு எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன் என்று நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யா விலகல்:
வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு முன்பு சூர்யா சில நாட்கள் நடித்திருந்தார், ஆனால் சூர்யா சில காரணங்களால் படத்திலிருந்து விலகினார், அதன் பின்னர் தான் இப்படத்தில் சூர்யா நடிக்க ஓப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.