சைஃப் அலிகான்
நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவிக்கு சொந்தமான பாந்த்ரா இல்லத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையே உலுக்கியுள்ளது. தனது வீட்டின் உள்ளே நுழைந்த கொள்ளையரை சைஃப் அலிகான் பார்த்துள்ளார். அப்போது, இந்த கொள்ளை முயற்சியை அவர் தடுக்க முற்பட்டபோது இந்த கத்திக்குத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 2.30 மணியளவு இந்த கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சைஃப் அலிகானை கத்தியால் குத்திய பிறகு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் அறுவை சிகிச்சைக்குப் பின் சைஃப் அலிகான் ஆபத்தான கட்டத்தைத் கடந்துள்ளதாக லீலாவதி மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சைஃப் அலிகான் வீட்டில் அதிகாலை மற்றொரு சம்பவத்தை ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது
வீடு வரை பின்தொடர்ந்த ஃபோட்டோகிராஃபர்
கடந்த 2023 ஆம் ஆண்டு பார்ட்டி ஒன்றை முடித்து விட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு சைஃப் அலிகான் மற்றும் மனைவி கரீனா கபூர் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் இருவரும் வீடு திரும்பும் வரையிலும் அவர்களை ஒரு புகைப்பட கலைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார் . வீட்டிற்கு வந்திறங்கிய சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூரை ஒரு போட்டோவிற்கு போஸ் கொடுக்க சொல்லி கேட்டுள்ளார் புகைப்பட கலைஞர். ஏற்கனவே வீடு வரை பின்தொடர்ந்ததால் கடுப்பில் இருந்த சைஃப் அலி கான் அந்த புகைப்பட கலைஞரை 'அப்படியே என் பெட் ரூம் வரைக்கும் வந்து விடு ' என கண்டித்துள்ளார். அவர் கோபத்தில் கத்திய வீடியோ சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.