இன்று ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் 55 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மென் இன் பிளாக், பேட் பாய்ஸ் மாதிரியான ஆக்‌ஷன் படங்களில் நாம் வில் ஸ்மித்தை பார்த்து ரசித்திருக்கிறோம் என்றாலும் அவரது முழு நடிப்பாற்றலும் வெளிப்படும் வகையிலான படங்களிலும் நடித்திருக்கிறார். வில் ஸ்மித் நடித்து பார்க்க தவறவிடக்கூடாத ஐந்து முக்கியமான படங்களைப் பார்க்கலாம்.


The persuit of happiness


எத்தனை வருடங்கள் கடந்தாலும் வில் ஸ்மித் நடித்த சிறந்தப் படங்களின் பட்டியலில் முதலில் இருக்கப் போவது இந்தப் படம்தான். தி பெர்ஷுட் ஆஃப் ஹாப்பினஸ் (The persuit of happiness) என்றால் மகிழ்ச்சிக்கான தேடல் என்று தமிழில் மொழிப்பெயர்க்கலாம். க்ரிஸ் கார்டனர் என்கிற ஒரு நிஜ மனிதரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். வழக்கமான எக்ஸ்ரே வழிமுறையைக் காட்டிலும் திறன் வாய்ந்த முறையில் எலும்புகளை ஸ்கேன் செய்யும் ஒரு கருவியை விற்கும் சேல்ஸ்மேனாக வேலை செய்கிறார் க்ரிஸ்.


ஆனால் யாரும் இந்த கருவியில் தங்களது பணத்தை முதலீடு செய்ய முன்வருவதில்லை. தனது மகனில் பள்ளிக் கட்டனத்தைக் கூட சமாளிக்க முடியாத க்ரிஸிடம் இருந்து பிரிந்து செல்கிறார் அவரது மனைவி. வறுமை, அவமானம், பசி என எல்லாவற்றின் உச்சத்திற்கும் சென்று வரும் க்ரிஸ் போராடுவதெல்லாம் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழதான். இன்னும் உலகம் தெரியாத தனது மகனிற்கு தனது கஷ்டங்களை மறைக்க க்ரிஸ் போராடும் காட்சிகள் நம் கண்களை கலங்கடிக்கக் கூடியவை. இறுதியாக தனது வாழ்க்கையில் நம்பிக்கையான ஒரு தருணம் வருகையில் வெடித்து வரும் தனது அழுகையை கட்டுப்படுத்த வில் ஸ்மித் நடிப்பு அவரது வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாக பெருமைப்படத் தகுதியானது.




ஐ ஆம் லெஜெண்ட் ( I Am Legend)


திடீரென்று பரவும் ஒரு வைரஸினால் மனிதர்கள் அனைவரும் மனிதர்களைக் கொள்ளும் ஜாம்பீகளாக மாறிவிடுகிறார்கள். இதில் இருந்து எப்படியோ தன்னை தற்காத்துக் கொண்டு ரகசிய இடத்தில் 3 ஆண்டுகளாக பதுங்கி வாழ்கிறார் ராணுவ மருத்துவரான நெவில் (வில் ஸ்மித்) . அவருக்கு இருக்கும் ஒரே துணை சமந்தா என்கிற அவரது நாய். வெளிச்சத்தை பார்த்து பயப்படும் இந்த ஜாம்பீக்கள் பகலில் பதுங்கி இருந்து இருட்டில் மட்டுமே வெளிவருகின்றன. இந்த வைரஸுக்கு ஒரு மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் முயாற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் நெவில். அவர் அதை செய்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ஃபேண்டஸித் திரைப்படமாக எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் மனிதனின் தனிமையுணர்ச்சியை மிக அழகாக சித்தரித்தப் படம். தனக்கு இருந்த ஒரே துணையை இழந்தப் பின் ஒரு மனிதனின் தனிமையுணர்ச்சியை வில் ஸ்மித் தனது நடிப்பில் வெளிக் கொண்டு வந்திருப்பார்.




செவன் பெளண்ட்ஸ் ( Seven Pounds )


கவனக்குறைவால் ஒரு கார் விபத்தில் ஏழு நபர்களின் மரணத்திற்கு காரணமாகிறார் டிம் (வில் ஸ்மித்). அதற்கு பிராயசித்தமாக ஏழு நபர்களுன் உயிரை காப்பாற்ற தனது உடல் உறுப்புகளையும் தனது சொத்துக்களையும் தானமாக கொடுத்து தானும் உயிரிழந்துவிட முடிவு செய்கிறார். அந்த ஏழு நபர்களை டிம் தேர்வு செய்வதே படத்தின் கதை. தான் தேர்வு செய்யும் நபர்கள் நல்லவர்களா என்பதை அவர்களின் குணத்தை சோதித்தும் பார்க்கிறார். இந்தப் படத்தின் குறிப்பிட்ட இந்த காட்சி வில் ஸ்மித் ரசிகர்களிடம் புகழ்பெற்றது.



அலி


பிரபல கருப்பின குத்துச்சண்டை வீரரான முகமது அலியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அலி. முகமது அலி கதாபாத்திரத்தில் வில் ஸ்மித் நடித்திருப்பார்.


கிங் ரிச்சர்


புகழ்பெற்ற் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் தனது இரு மகள்களை சிறந்த டென்னிஸ் வீரர்களாக உருவாக்க எந்த மாதிரியான போராட்டங்களை சந்தித்தார் என்பதே இந்தப் படத்தின் கதை. ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்.