Diary Movie release : உதயநிதி - அருள்நிதி கூட்டணியில் டைரி - ஆகஸ்ட் 26 வெளியாகிறது 


சமீப காலமாக திரில்லர் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அருள்நிதி தற்போது தனது பேவரைட் டைரக்டர் மற்றும் நண்பனுமான இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் டைரி. இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி உள்ளிட்ட படங்களை இயற்றிய இயக்குனர் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பண்ணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மை கதையோடு கொஞ்சம் கற்பனையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள டைரி திரைப்பத்திற்கு இசையமைத்துள்ளார் யோகான்.  


வெளியீடு தேதி அறிவிப்பு :


இப்படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் அருள்நிதி மற்றும் பவித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஷிவா ஷஹ்ரா,  'நக்கலைட்ஸ்' தனம், சாம்ஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். 


 






ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு:


நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான 'டி பிளாக்', 'தேஜாவு' போன்ற படங்கள் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் 2.25 நிமிடங்கள் ஓடும் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளியானது. இதன் திரைக்கதை மிகவும் வித்தியாசமாக த்ரில்லாக இருப்பது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. த்ரில்லிங் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு படி அதிகமான எதிர்பார்ப்பு இருப்பது சகஜம். அதே எதிர்பார்ப்பு இப்படத்திற்கும் இருக்கிறது. 


உதயநிதி - அருள்நிதி கூட்டணி:


உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட் மூவிஸ்" 2022ல் பல வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அருள்நிதியின் டைரி படத்தினையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகின. இப்படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் அருள்நிதி. இப்படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.