ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று!






 ‘சின்ன சின்ன ஆசை’ முதல்  ‘பொன்னி நதி பார்க்கணுமே’ வரை, பல ஹிட்களை கொடுத்தவர் ரஹ்மான். காதலன் படத்தில் ‘மர்ஹாபா...’ என ஒரு தேர்ந்த பாங்கு ஒலியைப் போல் ஒலித்து சிலிர்ப்பை ஏற்படுத்திய ரஹ்மானின் குரல்,  ‘அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு...’ என 2022இல் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ பட பாடலிலும் சிலிரிப்பை ஏற்படுத்த தவறவில்லை. ஒவ்வொரு ரசிகருக்கும் சிறந்த இசை அனுபவத்தை வழங்கி வரும் ரஹ்மானுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்


வாரிசு படத்தின் டிக்கெட் முன் பதிவு 






விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லரும், ஜனவரி 4 ஆம் தேதி வாரிசு படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் வாரிசு படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் நாளை (ஜனவரி 7) அல்லது ஜனவரி 8 ஆம் தேதி தான் முன்பதிவு தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தென் மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களில்  முன்பதிவு தொடங்கியுள்ளது. 


ஜெயிலர் அப்டேட் 






ஜெயிலர் படத்தில் இருந்து சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலையாள திரையுலகின் Complete Actor என கொண்டாடப்படும் நடிகர் மோகன்லால் ஜெயிலரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும், இதற்கான படப்பிடிப்பு ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயிலர் படம் பக்காவான ஃபேன் இந்தியா படமாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


ரஜினிகாந்தின் நண்பர் காலமானார்






சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மன்றத் தலைவர் வி.எம்.சுதாகர்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.இவர் நீண்ட நாட்களாக சிறுநீரக புற்றுநோயினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமாகியுள்ளார். 


இந்த வாரத்தில் வெளியாகும் ஓடிடி படங்கள்






விக்ரம் வேதா-வூட்
•Uunchai-ஜீ 5
•ஸ்டோரி ஆஃப் திங்க்ஸ்-சோனி லைவ் சீரிஸ்
•3C’s-சோனி லைவ் சீரிஸ்
•சவுதி வெல்லாக்கா-சோனி லைவ் 
•ஷஃப்பீகன்டே சந்தோஷம்-சிம்ப்ளி செளத்
•தி மெனு-ஹாட்ஸ்டார்