Armstrong murder: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையில் சிக்கிய பிரபல இயக்குநரின் மனைவி!

Armstrong murder : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மனைவியிடம் விசாரணை.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் அவர் கட்டி வரும் வீடு அருகே கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டி  படுகொலை செய்யப்பட்டார். இந்த திட்டமிட்ட கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முக்கியமான கொலையாளியான திருவேங்கடம் என்பவன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டான். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பலரிடமுமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 


அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்தவர் மொட்டை கிருஷ்ணன். ஏற்கனவே சம்போ செந்தில் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதால் அவனுடைய கூட்டாளிகளையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மொட்டை கிருஷ்ணன் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடப்பதற்கு முன்பும் பின்பும் மொட்டை கிருஷ்ணன் தொலைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார் பிரபல திரைப்பட இயக்குநரான நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 


மோனிஷா மொட்டை கிருஷ்ணனனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், வெளிநாடு தப்பித்து செல்வது சம்பந்தமாக  செல்போனில் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் நெல்சன் திலீப்குமாரிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் சினிமா வட்டாரத்துக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில் சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர். 

 

Continues below advertisement