Stock Market Today: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை; 80,802 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்!

=Stock Market Today: இந்திய பங்குச்சந்தை இன்று (20.08.2024) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

Continues below advertisement

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. சென்செக்ஸ் 81 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது. 

Continues below advertisement

இந்த வார தொடக்கத்தில் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமான நிலையில், இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 378.18 அல்லது 0.47% புள்ளிகள் உயர்ந்து 80,802.86 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 126.20 அல்லது 0.51% புள்ளிகள் உயர்ந்து 24,698.85 ஆக வர்த்தகமாகியது.

பங்குச்சந்தையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 2.78 மில்லியன் பங்குகள் 2 ப்ளாகிஸ் வர்த்தகமானதாக ப்ளூம்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிப்ளா நிறுவனத்தின் பங்கு 1% சரிந்தது. 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் குறைந்திருப்பது இந்திய ரூபாய் மதிப்பு உயர்வுக்கு சாதகாமாக இருந்தது. அமெரிக்க டாலர் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவு சரிந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரண்டு நாட்களாக ஏற்றத்தில் உள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் அதிகரித்து  83.79 ஆக இருந்தது. 
 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:

எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஜெச்.டி.எஃப்.சொ. லைஃப்., பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹிண்டால்கோ, டெக் மஹிந்திரா, பி.பி.சி.எல்., பஜாஜ் ஃபினான்ஸ், க்ரேசியம், ஈச்சர் மோட்டர்ஸ், கோடாக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டிவிஸ் லேப்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், சன் ஃபார்மா, விப்ரோ, ஏசியம் பெயிண்ட்ஸ், எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., நெஸ்லே, பிரிட்டானியா, எ.டி.ஐ. அமிண்ட்டிரீ, மாருதி சுசூகி, ரிலையன்ஸ்,  கோல் இந்தியா, லார்சன், ஹெச்.சி.எல். டெக்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி,  அல்ட்ராடெக் சிமெண்ட், எம்&எம், பஜாஜ் ஆட்டோ, பவர்கிரிட் கார்ப் ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின. 

ஓ.என்.ஜி.சி., பாரதி ஏர்டல், அதானி எண்டர்பிரைசிஸ், சிப்ளா, அப்பல்லோ மருத்துவமனை, ஐ.டி.சி., டாடா கான்ஸ் பராட், அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு., டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola