Armaan Maalik : பிரிட்டீஷ் பாப் பாடகர் எட் ஷீரனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட இந்திய பாடகர் அர்மன் மாலிக்!

பாலிவுட் திரையுலகில் முன்னனி பாடகராக வலம் வருபவர் அர்மன் மாலிக். சமீபத்தில் டென்மார்க்கில் புகழ் பெற்ற பிரிட்டீஷ் பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அர்மன் மாலிக் கலந்து கொண்டார்.

Continues below advertisement

பாலிவுட் திரையுலகில் முன்னனி பாடகராக வலம் வருபவர் அர்மன் மாலிக். சமீபத்தில் டென்மார்க்கில் புகழ் பெற்ற பிரிட்டீஷ் பாடகர் எட்  ஷீரானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அர்மன் மாலிக்,  ஷீரானின்  2 ஸ்டெப் என்ற பாடலை பாடியுள்ளார். அது மட்டுமன்றி,  அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து “இது ஒரு நெகிழ்ச்சியான தருணம்”  என குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

பாலிவுட் பாடகர் அரமன் மாலிக்

பாலிவுட்டின் புகழ் பெற்ற பாடகர் அர்மன் மாலிக். இவர் பாடிய ‘சனம் ரே’ பாடலால் ஹிந்தி தெரியாதவர்களையும் ஹிந்தி பாடல்களை பாட  வைத்தவர். அது மட்டுமின்றி, தெலுங்கில் “புட்ட பொம்மா” பாடலுக்கு அணைவரையும் ஆட வைத்தவர் இவர். எம் எஸ் தோனி படத்தில் வரும் “கொஞ்சம்..உன் பார்வையால்” பாடலால் திரும்பி பார்க்க வைத்தவர் அர்மன் மாலிக்.

பிரிட்டீஷ் பாப் பாடகர் எட் ஷீரன்

எட் ஷீரன் உலகப் புகழ் பெற்ற பிரிட்டீஷ் பாப் பாடகர். இவரது  “ஷேப் ஆஃப் யூ” பாடல் உலகப் புகழ் பெற்று, யூடியூபில் இன்று வரை பல மில்லியன் வியூஸ்களை கடந்து போய் கொண்டிருக்கிறது. எட் ஷீரன் இந்தியாவிலும் மிகப் பிரபலமானவர். இவரது முழு ஆல்பத்தில் ரிலீஸ் ஆகும் பாடல்களுக்கென நம் ஊரில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  இவரது இசை நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் டென்மார்க் நகரில் உள்ள கோபன்ஹேகன் என்ற நகரில் நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான எட் ஷீரானின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதில் அர்மன் மாலிக்கும் கலந்து கொண்டு எட் ஷீரானுடன் இசை மேடையை பகிர்ந்து கொண்டார்.  

எட் ஷீரனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட அர்மன் மாலிக்

எட் ஷீரனின் இசை நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட அர்மன் மாலிக்கிற்கு அவருடன் இசை மேடையைை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதில் அவர், எட் ஷீரனின் “2 Steps” என்ற பாடலின் “இந்தியன் வர்ஷனை”  பாடி அசத்தினார். இசை நிகழச்சிக்கு பிறகு எட் ஷீரனுடன் புகைப்படம் எடுத்துகொண்ட அவர், அதனை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமின்றி,  “இது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்” என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வாய்ப்பளித்த எட் ஷீரனிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். 

 

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான எட் ஷீரானின் “2 Steps” பாடலுக்கான ஹிந்தி வர்ஷனை அர்மன் மாலிக் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola