காமன்வெல்த் தடகள போட்டிகளில் இன்று ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். இவர் தொடக்க முதலே சிறப்பாக ஓடி வந்தார். இறுதியில் இவர் 8.11.20 என்ற நேரத்தில் கடந்து வெள்ளி வென்றார். அத்துடன் புதிய தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் தடகளத்தில் 10 ஆயிரம் மீட்டர் நடை பயணத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி பங்கேற்றார். இவர் பந்தய தூரத்தை 43.38.83 என்ற நேரத்தில் கடந்து அசத்தினார். அத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தினார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் தடகளத்தில் இந்தியாவிற்கு இது மூன்றாவது பதக்கமாகும். அத்துடன் காமன்வெல்த் நடைப்பயணம் பிரிவில் முதல் முறையாக பதக்கம் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் பிரியங்கா கோஸ்வாமி படைத்தார்.
ஏற்கெனவே ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். அதற்கு முன்பாக இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் உயரம் தாண்டுதலில் 2.12 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். இவர்களை தொடர்ந்து தற்போது தடகளத்தில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக தடகளத்தில் இந்திய ஆடவர் 4*400 மீட்டர் ரிலே பிரிவில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்தியாவின் முகமது அனாஸ் யஹியா, நிர்மல் டாம், முகமது அஜ்மல் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்றது. தகுதிச் சுற்றில் இந்திய அணி இரண்டாவது ஹீட்ஸில் களமிறங்கியது. இந்திய அணி இரண்டாவது ஹீட்ஸில் பந்தய தூரத்தை 3.06.97 என்ற நேரத்தில் கடந்தது. அத்துடன் இந்த ஹீட்ஸில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதன்மூலம் இந்திய ஆடவர் அணி 4*400 ரிலே பிரிவில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்தப் பிரிவின் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி நடைபெறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்