அர்ஜூன் தாஸ்


லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் வில்லனாக அறிமுகமாகிய அர்ஜூன் தாஸ் நாயகனாக கலக்கி வருகிறார். வில்லனாக அர்ஜூன் தாஸின் குரல் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் வில்லன் கதாபாத்திரங்களில் மட்டும் இல்லாமல் அவருக்கு நல்ல கதையுள்ள படங்களில் நாயகனாக நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் நாயகனாக நடித்தார். இதனை அடுத்து காலிதாஸ் ஜெயராம் உடன் இணைந்து அர்ஜூன் தாஸ் நடித்த போர் படம் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தபடியாக அவர் நடித்துள்ள படம் ரசவாதி


ரசவாதி


மிக சில படங்களை இயக்கி தனக்கென தேர்ந்தெடுத்த ரசிகர்களைக் கொண்ட சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். தியாகராஜா குமாரராஜா, ராம் , சாந்தகுமார் உள்ளிட்டவர்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். மெளனகுரு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சாந்தகுமார். மெளனகுரு திரைப்படம் வெளியான சமயத்தில் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பிற்காலத்தில் அதிகளவிலான மக்களால் பேசப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி பெரிய வெற்றிபெற்றது. தொடர்ந்து ஆர்யா நடித்து மகாமுனி படத்தை இயக்கினார். ஆர்யா இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிய பரிணாமத்தில் இப்படம் காட்டியது. சினிமாவிற்கு வந்து 12 ஆண்டுகளில் தன்னுடைய மூன்றாவது படத்தை தானே தயாரித்து இயக்கியுள்ளார் சாந்தகுமார்.


ரம்யா சுப்ரமணியம் , ரிஷிகாந்த், தான்யா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டி.என் .ஏ இந்தப் மற்றும் சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி கவனமீர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார்.


ரசவாதி டிரைலர்