தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 2024- 2025ஆம் ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் (Centre of Excellence - CoE), விளையாட்டு விடுதி (Sports Hostel - SH) மற்றும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (Sports Hostel of Excellence - SHE) ஆகியவற்றில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளதாவது:
''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் (CoE), விளையாட்டு விடுதிகள் (SH) மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் (SHE) பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
2024- 2025ஆம் ஆண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்த விளக்கம் கீழ்க்கண்டவாறு:
முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) -(6, 7, 8ஆம் வகுப்புகள்)
குறிப்பு: மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்குத் தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ / மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் 26.04.2024 முதல் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் குறித்த விவரம் கீழ்க்கண்டவாறு:
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்ய இயலாது.
ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். ஆடுகள தகவல் மையத்தின் பணி நேரம் காலை - 10:00 மணி முதல் மாலை - 5:45 முடிய.
தேர்வு போட்டியில் கலந்து கொள்ள வருகின்றவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படமாட்டாது என்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://sdat.tn.gov.in/
விண்ணப்பிக்க: https://tntalent.sdat.in/