Arjun Das : குளுகுளுன்னு இருக்காரு அர்ஜுன் தாஸ்.. என்ன காரணம் தெரிஞ்சுக்கணுமா? மேல படிங்க..

பிரபலமான பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது சமூக ஊடக பக்கத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு சிறந்த நடிகர் என்று குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார் அர்ஜுன் தாஸ். 

Continues below advertisement

2017-ஆம் ஆண்டு வெளியான மலையாளத்தில் வெளியான ‘அங்கமாலி டைரீஸ்’ என்ற படத்தின் ஹிந்தி ரீ மேக் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். பிரபலமான பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது சமூக ஊடக பக்கத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு சிறந்த நடிகர் என்று குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார் அர்ஜுன் தாஸ். 

Continues below advertisement

 

பாலிவுட் அறிமுகம் :

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகிவரும் "‘அங்கமாலி டைரீஸ்" படத்தின் ஹிந்தி ரீ மேக் திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விட்டது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சமயத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை பாராட்டிய பிரபலமான பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது சமூக ஊடக பக்கத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு சிறந்த நடிகர் என்று குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். அவரின் குறிப்பு கொண்ட இன்ஸ்டா போஸ்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை பகிர்ந்து உங்களுக்கு பிடித்த இயக்குனர் ஒருவரிடம் இருந்து இந்த ஒரு செய்தியை பெறும்போது... மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்.. என தெரிவித்துள்ளார்.

பிஸியாக இருக்கும் அர்ஜுன் தாஸ்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடித்த "விக்ரம்" பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தற்போது இயக்குனர் வசந்த பாலனின் 'அநீதி' படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் 'சார்பட்ட பரம்பரை' படத்தின் கதாநாயகியான துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, பரணி, காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சாரா மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola