The Goat Audio Launch : தி கோட் ஆடியோ லாஞ்ச் இல்லையா ? அரசியல் நெருக்கடி தான் காரணமா ?

விஜயின் தி கோட் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடத்தவிடாமல் இருக்க அரசியல் நெருக்கடி தரப்படுகிறதா என்கிற கேள்விக்கு படக்குழுவினர் பதிலளித்துள்ளார்கள்.

Continues below advertisement

தி கோட் ட்ரெய்லர்

தி கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கலவையான ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் பத்திரிகையாளர்களின் குதர்க்கமான கேள்விக்கு செம கூலாக பதிலளித்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் விஜய் தனது கட்சிக்கொடியை வெளியிட இருக்கும் நிலையில் தி கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியதற்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற வகையில் பலவிதமான கேள்விகள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் கேட்கப்பட்டன விஜயின் அரசியலுக்கும் இந்தப் படத்திற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை, இது முழுக்க முழுக்க அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான ஒரு கமர்ஷியல் படம் என்று திட்டவட்டமாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தி கோட் ஆடியோ லாஞ்ச்

விஜய் தனது கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருவதால் தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வருவாரா? தி கோட் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்குமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் பொதுவாக விஜய் படங்கள் வெளியானால் அதற்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் வருவது வழக்கம் . தற்போது விஜய் அரசியலுக்கும் வருவதால் தி கோட் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடத்துவதற்கு அரசியல் ரீதியிலான நெருக்கடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இசை வெளியீடு நிகழ்ச்சி நடத்த படக்குழு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அனுமதி கிடைக்காததாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்தார்.

" இது விஜயுடன் எங்கள் நிறுவனத்திற்கு இரண்டாவது படம். பிகில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை கடைசி ஒரு வாரத்தில் தான் திட்டமிட்டோம். தி கோட் படத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது. நாங்கள் படத்தை முடித்து டெலிவரி கொடுத்த பின்புதான் அதைப் பற்றிதான் திட்டமிட வேண்டும். இன்னும் நாங்கள் இது பற்றி நாங்கள் எந்த அரங்கத்திடமும் பேசவில்லை. இன்னும் விஜயிடமே நாங்கள் இதைப்பற்றி பேசவில்லை. அவரிடம் கேட்டு அவர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செய்வோம். ஆடியோ லாஞ்ச் இருக்கா இல்லையா என்று இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமக தகவலை வெளியிடுவோம் " என்று அவர் கூறினார்

Continues below advertisement
Sponsored Links by Taboola