அரவிந்த்சாமி :
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அரவிந்த்சாமி. 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் . அதன் பிறகு தளபதி, ரோஜா, மறுபடியும் ,பம்பாய்,இந்திரா, மின்சார கனவு, என் சுவாச காற்றே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நெகட்டிவ் ஷேடில் மாஸாக அரவிந்த் சாமி களமிறங்கிய போகன் , தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது பல மாஸ் கிரைம் திரில்லர் திரைப்படங்களை அரவிந்த்சாமி கைவசம் வைத்திருக்கிறார்.
”நான் கெத்து இல்லைங்க “
“மாப்பிள்ளை அரவிந்தசாமி மாதிரி இருக்காரு “ என இன்றும் கிராமப்புறங்களின் உவமை கூறுவது உண்டு. அந்த அளவுக்கு அழகாலும் நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர். இப்படி கூறப்படும் உவமை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என அரவிந்த்சாமியிடம் கேட்ட பொழுது, “ எதுவுமே என்னை பற்றி தெரியாம இப்படி சொல்லிட்டு இருக்காங்க...என் அப்பா , அம்மாவிடம் கேட்டால் அவர்கள் நான் எப்படி என சொல்லிவிடுவார்கள். எனது உண்மையான முகம் தெரிந்தால் இந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என கேட்க மாட்டார்கள் “ என்றார் நகைச்சுவையாக. அதே போல மாஸ் , கெத்து என்ற வார்த்தைகளில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை கிடையாது. நடிப்பது என் வேலை அதைத்தான் செய்கிறேன். மாஸாக நான் எதையாவது செய்திருந்தால் என்னை மாஸ் நடிகர் என சொல்லலாம் என சர்க்காஸமாக பதிலளித்தார் அரவிந்த்
வில்லனாக நடிக்க ஆசை :
அரவிந்த் சாமி தன்னை ஒரு வெர்சட்டைல் நடிகராக அடையாளப்படுத்த போராடியவர். அது 20 வருடங்களுக்கு பிறகுதான் கைக்கூடியது. சாக்லெட் பாயாக மட்டுமே பார்க்கப்பட்டவர் , தற்போது நெகட்டிவ் ரோல்ஸ் , மாஸ் ஹீரோ படங்கள் என நடிக்க தொடங்கியிருக்கிறார். என் சுவாச காற்றே திரைப்படத்திற்கு பிறகு அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கவில்லை. 10 வருடங்களுக்கு பிறகு கடல் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தவருக்கு தனி ஒருவன் , போகன் போன்ற திரைப்படங்கள் வேறு ஒரு அடையாளத்தை கொடுத்தது.தற்போது கள்ளபார்ட் திரைப்படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளார். ஆனாலும் வில்லகான நடிக்க வேண்டும் என்பதுதான் அரவிந்த் சாமியின் ஆசை. விரைவில் ஒரு படம் இயக்குவேன் என்றும் நம்பிக்கையாக கூறுகிறார்.