'மகாபாரதத்துக்கு இன்னொரு பெயர் ஜெயா' - வெளியானது தலைவி ட்ரெய்லர்..

பிரபல இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தலைவி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Continues below advertisement

பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தலைவி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அரவிந்த்சுவாமி மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக கூறும் படமாக இது உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து "நான் உங்கள் வீட்டுப்பிள்ளை" என்ற பாடலின் சிறு தொகுப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. 1968-ஆம் ஆண்டு புதிய பூமி என்ற எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தில் வெளியான அந்த பாடல், ஆண்டுகள் கடந்து இன்றளவும் பிரபலமாக இருந்து வருவதுடன், அதிமுகவின் தேர்தல் பிரச்சார பாடலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைவி படத்தில் அரவிந்த்சுவாமி நடித்து வெளியாகியுள்ள அந்த பாடல், புதிய பூமி படத்தில் வெளியான பாடலை போலவே சிறு வித்தியாசம்கூட இல்லாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பட வெளியீட்டுக்கு பிறகு நிச்சயம் இந்தப் பாடல் பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">All set for <a >#ThalaiviTrailer</a> launch... how do I look ? <a >pic.twitter.com/axOlUZyfq6</a></p>&mdash; Kangana Ranaut (@KanganaTeam) <a >March 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியது. பல சிக்கல்கள் முளைக்க, அதை அனைத்தையும் கடந்து தற்போது இந்த படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.      

Continues below advertisement
Sponsored Links by Taboola