நாகை மாவட்டத்தில் வேட்டுவம் திரைப்பட படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல்துறை பதிவு செய்துள்ளது.

பா.ரஞ்சித்:

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களுள் பஒருவராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக பா.ரஞ்சித் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருந்த நிலையில் அது எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றிப்பெறவில்லை. 

தற்போது ரஞ்சித் வேட்டுவம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், அசோக் செல்வன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். 

படப்பிடிப்பில் விபத்து:

இந்த படத்தின் முக்கிய ஸ்டண்ட் காட்சி ஒன்று நாகை மாவட்டம் கீழையுர் அருகே விழுந்தமாவடி அருகே நடந்தது. அப்போது கார் ஸ்டண்ட் நடந்த விபத்தில் மோகன் ராஜ் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது, கீழே விழுந்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது

இதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர்கள், ஸ்டண்ட் யூனியனை சேர்ந்தவர்கள் மோகன் ராஜ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பா.ரஞ்சித் மீது வழக்கு:

இந்த நிலையில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த விவகாரத்தில் நாகை மாவட்ட போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்டது என மூன்று பிரிவுகளின் கீழ் இயக்குனர் பா.ரஞ்சித், ராஜ்கமல்,வினோத்,பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இரங்கல்:

ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் மறைவுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்  சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துகொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் அண்ணா என்று தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்