சரத்குமார் பிறந்தநாள்

சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 986ம் ஆண்டு  தெலுங்கு திரைப்படம் ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் . தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  'புலன் விசாரணை' படத்தில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வில்லனாக சரத்குமாரை அறிமுகம் செய்து வைத்தார். அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் விருதையும் பெற்றுத்தந்தது. தொடர்ச்சியாக 90களில் முன்னணி இயக்குநர்களாக இருந்த அனைவரின் படங்களிலும் நாயகனாக அலங்கரித்தார். சரத்குமார் திரைப்பயணத்தில் சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, ஜானகி ராமன், ஐயா, மாயி, அரசு, ஏய், சாணக்யா என அடுத்தது சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்களால் கொண்டாப்பட்டார். 

சினிமாவில் ரீஎண்ட்ரி

ஹீரோவாக உச்சத்தை தொட்ட சரத்குமார் தற்போது பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பொன்னியில் செல்வன் , வாரிசு வானம் கொட்டட்டும் , போர் தொழில் ஆகிய படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சரத்குமார் சித்தார்த் நடித்து சமீபத்தில் வெளியான 3BHK திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த வரலட்சுமி 

சரத்குமார் பிறந்தநாளுக்கு அவரது மகள் வரலட்சுமி உணர்கரமான பதிவிட்டு எக்ஸ் தளத்தில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்."பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா... நீங்க எப்பவும் என் கைய பிடிச்சுட்டீங்க, இன்னைக்கு வரைக்கும் அதை விட்டுக்கொடுக்கல.. நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்.. உங்க தூய மனசுக்காகவும், நீங்க சந்திக்கிற எல்லாருக்கும் நீங்க கொடுக்கிற அன்புக்காகவும் கோடிக்கணக்கான மக்கள் உங்களை எப்படி நேசிக்கிறார்களோ, அதே மாதிரி.. உங்க பயணம் இன்னும் தொடருது.. நீங்க தேடுறதை கண்டுபிடிக்கணும்.. உங்க போராட்டமும் விடாமுயற்சியும் எல்லாராலும் பாராட்டப்படணும்.. நீங்க இன்னைக்கு வரைக்கும் எவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு எங்களுக்கும் தெரியும்.. உங்களை என் அப்பான்னு சொல்றதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. அப்பாவை ரொம்ப நேசிக்கிறேன்.. நிலவுக்கும் எல்லையில்லாம.. இந்த நாள் உங்களுக்கு எல்லா அன்பு பிரார்த்தனைகளும் ஆசிகளும் கிடைக்கட்டும்.. வார்த்தைகள் நியாயம் செய்யல, ஆனா நான் எவ்வளவு நேசிக்கிறேன்னு உனக்குத் தெரியும்.." என வரலட்சுமி பதிவிட்டுள்ளார்