தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷை திருமணம் செய்து கொண்ட இவர் அவரை அண்மையில் அவரை பிரிவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.






இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இது ஒரு பக்கம் போய்கொண்டிருக்க, மறுபக்கம் தனது அடுத்த சிங்கிள் பாடலான  ‘பயணி’ வேலைகளை தொடங்கினார் ஐஸ்வர்யா. இதனிடையே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், அண்மையில் அதிலிருந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எனினும், இந்த வாரம் காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐஸ்வர்யா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்தப்பாடலில் மாரி 2, பீஸ்ட் போன்ற படங்களின் நடன இயக்குனர் ஜானி நடிகராக அறிமுகமாகிறார்.




கதாநாயகியாக ஷ்ரஷ்டி வர்மா என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். ஹிந்தியில் சிவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. வழக்கமாக உருவாக்கப்படும் மியூசிக் வீடியோ பாணியில் இல்லாமல் எளிமையான மனிதர்களின் வாழ்வியல் கொண்டாட்டங்களை மையப்படுத்தி இதனை இயக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.



 


அங்கித் திவாரி இசை அமைத்திருக்கும் இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித், தெலுங்கில் சாகர் பாடி இருக்கிறார்கள். விஷ்ணு ரங்கசாமி பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.