நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் sprtify-ல் 15 கோடி ஸ்ட்ரீம்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த வருடம் ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் 'பீஸ்ட்' படம் வெளியானது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
'பீஸ்ட்' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றிய நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் ஏராளமானோரை காவர்ந்தது. இந்த பாடலை அனிருத் மற்றும் ஜெனிதா காந்தி பாடினர். இந்த பாடலுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டனர். இந்நிலையில் அரபிக் குத்து பாடல் sprtify-ல் 15 கோடி ஸ்ட்ரீம்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக ரவுடி பேபி பாடல் யூடியூபில் 1 பில்லியன் பார்வையாளர்களை கடந்து இமாலய சாதனை படைத்தது. 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 'மாரி 2' வெளியானாலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தான் யூ டியூப் சேனலில் 'ரவுடி பேபி' பாடல் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டது. அப்போதிலிருந்தே இப்பாடல் வைரலாகத் தொடங்கியது. தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர். பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த பாடல் 1 பில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்தது 'ரவுடி பேபி' பாடல். 100 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற இமாலய சாதனையையும் இப்பாடல் எட்டியது. மேலும் அதிக லைக்குகளை பெற்ற முதல் தென் இந்திய பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றது. இந்த சாதனையால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க
AIADMK: மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு.. தீர்மானம் நிறைவேற்றம்