இந்திய திரையுலகில் இசைப்புயலாக கலக்கி வருபவர், ஏ ஆர் ரஹ்மான். இவரது சகோதரி முதல் மகன் வரை அனைவருமே இசைக்குடும்பமாக கலைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். ரஹ்மானின் சகோதரி இஷ்ரத்காதரி, இசையமைப்பாளரும் பாடகியும் ஆவார். இவர், குடியரசு தினத்திற்காக, மகாகவி பாரதியார் எழுதிய எந்தையும்-தாயும் வந்தேமாதரம் என்ற பாடலைப் பாடி அதற்கு இசையும் அமைத்துள்ளார். 


 






மகாகவி பாரதி வரிகள்:


இந்த வருடத்தின் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில், எந்தையும் தாயும்’ எனும் பாரதியாரின் தேசபக்தி பாடலைப் பாடி இசையமைத்து வீடியோ பகிர்ந்துள்ளா இஷ்ரத். இந்தப் பாடலை மாதேஷ் இயக்கியுள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.




இந்திய நாட்டைப் போற்றும் சிறந்த வரிகளைக் கொண்ட இந்தப் பாடல் இஷ்ராத்தின் இசையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்,  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றது. 


பாடல் குறித்து இஷ்ரத்:


இஷ்ரத்காதரி, நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் எந்தையும் தாயும்-வந்தேமாதரம் பாடலை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். இப்பாடலை, தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் பெறு மகிழ்ச்சி கொள்வதாகவும் இஷ்ரத்காதரி கூறியுள்ளார். 


 






இஷ்ரத் பாடி இசையமைத்துள்ள நாட்டுப்பற்று மிக்க இந்த பாடலின் முதல் பிரதியை, மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெற்றுக்கொண்டார். இது குறித்த போட்டோக்களும் தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.